Hair Fall: வேகமாக மற்றும் அடர்த்தியான முடி வளர எளிய வீட்டு வைத்தியம்!

Hair Fall Tips: தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது முடியை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Nov 17, 2023, 06:23 AM IST
  • முடிக்கு எண்ணெய் தடவுவது வேர்களை வலுப்படுத்துகிறது.
  • முடி உதிர்வதை தடுத்து, நரை முடியை தாமதப்படுத்துகிறது.
  • ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்கிறது.
Hair Fall: வேகமாக மற்றும் அடர்த்தியான முடி வளர எளிய வீட்டு வைத்தியம்! title=

மோசமான உணவுப்பழக்கம், ஆரோக்கியமற்ற தினசரி வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு மற்றும் மோசமான முடி பராமரிப்பு போன்ற காரணங்களால் பல நேரங்களில் முடி வளர்ச்சி நின்று, முடி கொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நமது தினசரி வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம், முடி வளர்ச்சியை மீண்டும் அதிகரிக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் முடி வளர்ச்சியை விரைவாக அதிகரிக்க விரும்பினால், உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சில இயற்கையான மாற்றங்களை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த இயற்கையான பொருட்கள் பல மருத்துவ குணங்களை கொண்டவை. இது முடியை உள்ளே இருந்து ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.  

மேலும் படிக்க | இரவில் நல்ல தூக்கம் வேண்டுமா? இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள்!

எள் எண்ணெய் மற்றும் வெந்தயம்

வெந்தயம் மற்றும் எள் எண்ணெய் இரண்டுமே முடிக்கு ஊட்டமளிக்கும் சக்திகளை கொண்டுள்ளன. இதனால், இந்த இரண்டிலிருந்தும் செய்யக்கூடிய ஹேர் ஹாயில் உதவியுடன், முடியின் வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்க செய்யலாம். இந்த ஹேர் ஹாயில் செய்ய வெந்தயத்தை நன்கு உலர்த்தி, அவற்றைப் பொடி செய்யவும். உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப, பாத்திரத்தில் உலர்த்திய வெந்தயப் பொடியை எடுத்து, அதில் 1ஸ்பூன் எள் எண்ணெயைக் ஊற்றி கலக்கவும். இதில் எண்ணெய் அதிகமாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த கலவையை முடியில் தேய்த்து அரைமணி நேரம் நன்கு ஊற வைக்கவும். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

அலோ வேரா ஜெல்

அலோ வேரா ஜெல் முடிக்கு தேய்ப்பது முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றை ஹேர் பேக்காகவும், எண்ணெய் முறையிலும் தலையில் பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு மூன்று முறை இரவில் தூங்கும் முன்பு தலையில் தடவி, காலையில் தலைமுடியை நன்கு கழுவவும். இரவு ஜெல்லை தலையில் தடவ முடியவில்லை என்றால், காலையில் குளிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு கற்றாழை ஜெல்லைதலையில் தடவலாம்.

நெல்லிக்காய் 

நெல்லிக்காய் சாறு வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற இயற்கையான மூலப் பொருட்களை கொண்டுள்ளது.  இது முடிக்கு பல வழிகளில் நன்மைகளை தருகிறது.  நெல்லிக்காய் சாற்றை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் காய விடவும். அரை மணி நேரம் கழித்து முடியை நன்கு கழுவவும்.  இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முடி கொட்டுவது நிற்கும்.

தேங்காய் பால்

தேங்காய்ப் பாலில் சிறிது ஆலிவ் எண்ணெயைக் கலந்து, அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். இது முடியை நீளமாகவும், பட்டுப் போல பளபளப்பாகவும் மாற்றும். மேலும், முடி வேகமாக வளர வெங்காய சாற்றை முடிக்கு தடவலாம். இதில் உள்ள சல்பர் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை துணியால் வடிகட்டவும். இந்த சாற்றை உச்சந்தலையில் தடவவும்.  

நீங்கள் முடி கொட்டுவதை நிறுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்கள் தலைமுடி காற்று மாசு, அதிக வெப்பம் அல்லது ஹேர் ஸ்டைலிங் செய்வதால் இந்த பிரச்னை அதிகரிக்க செய்யும்.  இது இறுதியில் உங்கள் முடியை சேதப்படுத்தும். அனைத்து சேதங்களிலிருந்தும் முடி கொட்டுவதை பாதுகாக்க, முடிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விதமான காரணிகளில் இருந்தும் விலகி இருங்கள்.

மேலும் படிக்க | தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News