உடல் சோர்வை நீக்கி உறக்கத்தை கேட்கும் எச்சரிக்கை மணி கொட்டாவி!

தினசரி வேலைபளுவால் உடல் சோர்வை நீக்கி உறக்கத்தை கேட்கும் எச்சரிக்கை மணி தான் கொட்டாவி!!

Last Updated : May 5, 2019, 04:21 PM IST
உடல் சோர்வை நீக்கி உறக்கத்தை கேட்கும் எச்சரிக்கை மணி கொட்டாவி! title=

தினசரி வேலைபளுவால் உடல் சோர்வை நீக்கி உறக்கத்தை கேட்கும் எச்சரிக்கை மணி தான் கொட்டாவி!!

வயிறு பசித்தால் சிறுங்குடல் பெருங்குடலை தின்றுவிடுவது போல் அலாரம் அடிக்கும். அதுபோலத்தான் கொட்டாவி விடுவதும் கூட உடல் சோர்வை நீக்கி உறக்கத்தை கேட்டு கெஞ்சும் எச்சரிக்கை மணி  என்று சொல்லலாம். எப்போதாவது உறக்க நேரம் குறைந்தபோது கொட்டாவி வருவது சரி. ஆனால் எந்நேரமும் கொட்டாவி என்று இருந்தால் அது உடல் சோர்வு, மந்தம், உறக்கம் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதற்கான அறிகுறி என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மூளைதான் உடல் அசைவுகள் பெரும்பாலானவற்றுக்கு கட்டளை பிறப்பிக்கிறது ஆனால் அவற்றின் ஆரோக்கியம் குறைந்தாலும் கொட்டாவி வரும்.  பக்கவாதம், அலர்ஜி போன்றவை ஏற்படும் போதும், கல்லீரலில் பாதிப்புகள் இருந்தாலும், மூளையின் தண்டில் சிறு புண்கள் இருந்தாலும், சமீபகால ஆய்வின் படி உடலின் வெப்பநிலை சமநிலையில்லாத போதும் கொட்டாவி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிலர் தடுக்கிவிழுந்தால் கூட மாத்திரைகளின் தயவோடு வாழவிரும்புவார்கள். மாத்திரைகளின் சோர்வினால் கூட கொட்டாவி உண்டாக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த கொட்டாவி விடுபவர்களால் பக்கத்தில் உற்சாகமாக இருப்பவர்களுக்கும் தொற்று நோய் போல் உண்டாக்கி அவர்களுக்கும் கொட்டாவியை உண்டு பண்ணுகிறது.

இயல்பாக எப்போதாவது வரும் கொட்டாவி பாதிப்பில்லை. ஆனால் வாயை பெரிதாக பிளந்து சத்தத்தோடு கூடிய கொட்டாவி தொடர்ந்து அடிக்கடி வந்தால் அது உடல் உறுப்புகளில் ஏதேனும் பிரச்னையா என்று பரிசோதித்துக்கொள்வது நல்லது.

சிலருக்கு சோர்வு இருக்காது ஆனால் கொட்டாவி நிற்காமல் இருக்கும். கை கால்களில் பக்கவாதப் பிரச்னைகள் உண்டாவற்கான வாய்ப்பு உண்டு என்று முன்னெச்சரிக்கையாக கொட்டாவி அறிகுறியாக வருகிறது என்கிறார்கள். மாறிவரும் பழக்க வழக்கம் உணவை தொடர்ந்து உறக்கத்திலும் வந்துவிட்டது. இதனால் அதிக களைப்புகள் உண்டாகி கொட்டாவி வருகிறது. பொதுவாக கொட்டாவி வந்தால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்றே சொல்லலாம். அதனால் மூச்சை ஆழமாக மெதுவாக  உள்ளிழுத்து வெளியேறுவதையும் நிதானமாக கடைப் பிடிக்க வேண்டும். இப்படி 10 முறை செய்தால் இயல்பாக விடப்படும்  கொட்டாவி நின்றுவிடும்.

இவையெல்லாம் கண்டு கல்லீரல் பிரச்னையா? மூளையில் பாதிப்பா? பக்கவாதம் வருமா என்றெல்லாம் கற்பனைக்குதிரையைத் தட்டிவிடாதீர்கள். கொட்டாவி என்பது இயல்பான ஒன்று. மூச்சை ஆழமாக உள்ளிழுத்து ஆக்ஸிஜனை உடலுக்கு நீக்கமற நிரப்பினால் கொட்டாவி வருவது குறைந்துவிடும். தொடர்ந்து கொட்டாவி வந்தால் உடல் சோர்வை சரி செய்யுங்கள். சோர்வின்றி கொட்டாவி தொடர்ந்தால் மருத்துவரை நாடுங்கள்.

 

Trending News