தற்போதைய நவீன உலகில், நம்மில் பலர் உட்கார்ந்து கொண்டே செய்யும் அலுவலக வேலைகளில்தான் ஈடுபட்டு வருகிறோம். இது, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், உடல் எடை அதிகமாவதற்கும், உடல் சுறுசுறுப்பின்மைக்கும் வழி வகுத்து விடும். அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் நம் உடலில் பல மாற்றங்கள் ஏறடும். இதனால் கொழுப்பும் கரையாமல் இருக்கும். எனவே, அமர்ந்து கொண்டே வேலை செய்பவர்கள், எளிதில் கொழுப்பை குறைக்கவும், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கவும் சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?
அவ்வப்போது பிரேக் எடுத்துக்கொள்வது:
8 முதல் 9 மணி நேரம் வரை தொடர்ந்து அமர்ந்து கொண்டே வேலை பார்க்கும் போது அவ்வப்போது பிரேக் எடுத்துக்கொள்வது அவசியம். அப்படி பிரேக் எடுக்கையில், உடல் மற்றும் கை கால்களை நீட்டி மடக்க வேண்டும். இது போன்ற பிரேக்குகளை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எடுக்க வேண்டும். இதனால், உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து கலோரி குறையும்.
நாற்காலி உடற்பயிற்சிகள்:
நாற்காலியில் அமர்ந்து கொண்டே செய்யும் உடற்பயிற்சிகளும் இருக்கின்றன. கால்களை தூக்கி மடக்குவது, நாற்காலி ஸ்குவாட் செய்வது மேஜை மீது பாதி சாய்ந்து புஷ்-அப் செய்வது போன்றவை தசையை வலுபெற செய்யும். இதனால், கொழுப்பு குறையும்.
அமரும் பந்து:
பல இடங்களில் நாற்காலிக்கு பதில், அமரும் பந்து இருக்கும். இதில் அமர்ந்து பழகுவது, உங்களது தசைக்கு நல்ல உடற்பயிற்சியாக அமையும். இது நீங்கள் அமரும் தோரணையை மாற்றுவது மட்டுமன்றி கொழுப்பையும் கரைக்கும்.
படிகளை பயன்படுத்துங்கள்:
லிஃப்ட் அல்லது நகரும் படிக்கட்டுகளை உபயோகிப்பதற்கு பதில், படிக்கட்டுகளை தேர்வு செய்யுங்கள். படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது நல்ல கார்டியோ உடற்பயிற்சியாகும். இந்த சின்ன உடற்பயிற்சி உங்கள் உடலில் சேரும் கொழுப்பை கரைத்து இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
நடந்து கொண்டே வேலை செய்வது..
பலருக்கு யாரிடமாவது போன் செய்து பேசுவது வேலையாக இருக்கும். அல்லது அலுவலக நேரத்திலேயே ஏதேனும் போன் வந்தால், நாம் அமர்ந்து கொண்டே பேசாமல் நடந்து கொண்டே பேசலாம். அலுவலகத்தை சுற்றி அப்படியே நடந்து வருவது, அல்லது சிறிது தூரம் நடப்பது உங்கள் உடலில் சேரும் கொழுப்பை குறைக்கும்.
மேலும் படிக்க | அசிங்கமான தொப்பை கொழுப்பை அசால்டாய் குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்
நின்று கொண்டே வேலை செய்தல்..
அமர்ந்து கொண்டு மட்டுமல்ல, நின்று கொண்டும் வேலை செய்யும் வகையில் தற்போது பிரத்யேகமாக சில டெஸ்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதலால், சில மணி நேரம் உட்கார்ந்தாலும் பிறகு நின்று கொண்டே வேலை செய்யலாம். இதனால் கொழுப்பு கரைவது மட்டுமன்றி உங்களது தோரணையும் மாறும்.
தசைகளை வலுப்படுத்துதல்:
அமரும் போது நிமிர்ந்து நேராக அமர்ந்து வேலை பார்ப்பது உங்களது தசைகளை வலுப்படுத்த உதவும். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் தடுக்கலாம்.
தண்ணீர் அருந்துங்கள்:
தண்ணீர் அருந்துவது உங்களது உடலில் நீர்ச்சத்தினை குறையாமல் பார்த்துக்கொள்ளும். இது உங்களின் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் உதவி புரிவது மட்டுமன்றி, உங்களது வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலில் தேவையற்று தங்கியிருக்கும் கொழுப்பும் குறையும்.
மூச்சு பயிற்சி:
ஒரு நாளில் அடிக்கடி மூச்சு பயிற்சி செய்வது உங்களது உடல் மற்றும் மன நலனுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இது, உங்கள் உடலில் ஆக்ஸிஜனை அதிகரித்து கொழுப்பு சேராமல் தடுக்க உதவுகிறது.
மேலும் படிக்க | 2023 முடிவதற்குள் ‘இந்த’ 7 விஷயங்களை கண்டிப்பாக செய்து விடுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ