கொரோனாவுக்கு மருந்து கிடைத்தது! டெக்ஸாமெதாசோனிலிருந்து மீண்டு வரும் நோயாளிகள்

கொரோனா வைரஸின் மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். கொரோனா நோயாளிகள் டெக்ஸாமெதாசோன் (Dexamethasone) என்ற மருந்தின் பயன்பாட்டிலிருந்து மீண்டு வருகிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2020, 09:06 AM IST
  • கொரோனா வைரஸின் மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர்.
  • கொரோனா நோயாளிகள் டெக்ஸாமெதாசோன் என்ற மருந்தின் பயன்பாட்டிலிருந்து மீண்டு வருகிறார்கள்.
  • டெக்ஸாமெதாசோன் மலிவானது மற்றும் எளிதாக கிடைக்கிறது.
  • உலகளவில் இந்த தொற்றுநோயால் சுமார் 4.5 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவுக்கு மருந்து கிடைத்தது! டெக்ஸாமெதாசோனிலிருந்து மீண்டு வரும் நோயாளிகள் title=

Coronavirus Treatment: கொரோனா வைரஸின் மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர். கொரோனா நோயாளிகள் டெக்ஸாமெதாசோன் (Dexamethasone) என்ற மருந்தின் பயன்பாட்டிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்பதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். டெக்ஸாமெதாசோன் என்ற ஸ்டீராய்டு மூலம் தீவிர நோயாளிகளின் இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது என்று ரிக்டர்ஸ் ஒன்று கூறுகிறது. இந்த மருந்து பற்றி விரைவில் ஒரு ஆய்வுக் கட்டுரையும் வெளியிடப்படும்.

டெக்ஸாமெதாசோன் மிகவும் மலிவான ஸ்டீராய்டு (Steroid)மற்றும் பல நோய்களைக் குறைக்க உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருந்தை ஆராய்ச்சி செய்யும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக (Oxford University) விஞ்ஞானி மார்ட்டின் லாண்ட்ரே கூறுகையில், COVID-19 நோயாளிக்கு ஆக்ஸிஜன் குறைபாடு இருந்தால் மற்றும் வென்டிலேட்டரில் இருந்தால், அத்தகைய நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் வழங்கப்பட்டால், அந்த நோயாளி உயிர்வாழும் வாய்ப்புகள் அதிகம். அதேநேரத்தில் இதற்கான செலவு மிகவும் குறைவு தான் என்று ரிக்டர்ஸ் கூறுகிறார். 

இதையும் படியுங்கள் | Good News!! கண்டுபிடிக்கப்பட்டது கொரோனா வைரசுக்கு சிரப் மருந்து.. ஏப்ரல் மாதத்தில் சோதனை..

மார்ட்டின் லாண்ட்ரேவின் உதவியாளர் பீட்டர் ஹோர்பி கூறுகையில், டெக்ஸாமெதாசோன் மட்டுமே இப்போது வரை இறப்பைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய வெற்றி. டெக்ஸாமெதாசோன் மலிவானது மற்றும் எளிதாக கிடைக்கிறது. ஆனால் உலகெங்கிலும் உள்ள மக்களின் உயிரைக் காப்பாற்ற உடனடியாகப் பயன்படுத்தலாம்.

கொரோனா சிகிச்சைக்காக (Coronavirus Treatment) இதுவரை எந்த மருந்தும் அல்லது தடுப்பூசியும் தயாரிக்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியும். உலகளவில் இந்த தொற்றுநோயால் சுமார் 4.5 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

இதையும் படியுங்கள் | எச்சரிக்கை: கொரோனாவை காட்டிலும் கொடிய வைரஸ் மீன்கள் மூலம் பரவ வாய்ப்பு!

கொரோனா நோயால் வென்டிலேட்டரை அடைந்த ஒவ்வொரு 8 நோயாளிகளுக்கும் டெக்ஸாமெதாசோன் மருந்துகளை வழங்குவதன் மூலம், அவர்களில் ஒருவர் நலம் பெற்றுள்ளார் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

ஆக்ஸிஜன் தேவையில்லாத கோவிட் (COVID-19) நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த மருந்து நோயாளிகளுக்கு சுவாசிக்கும் திறனை அதிகரிக்கிறது என்பது முடிவுகளிலிருந்து தெளிவாகிறது.

இதையும் படியுங்கள் | உங்களிடம் Hand Sanitizer, Face Mask, Tissue இருந்தால் கொரோனா அபாயம் இல்லை

வெல்கம் டிரஸ்ட் (Wellcome Trust global health charity) உலகளாவிய சுகாதார தொண்டு நிறுவனத்தின் கோவிட் -19 நிபுணர் நிக் கமாக் (Nick Cammack) கூறுகையில், இந்த ஆராய்ச்சி கொரோனா தொற்றுநோய்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரங்களுக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று அவர் கூறினார்.

இந்த மருந்தை மக்கள் தாங்களாகவே பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மருத்துவரின் ஆலோசனையின்றி இந்த மருந்தை எடுக்கக்கூடாது.

Trending News