குடிக்கிற டீ கலப்படமானதா என்பதை கண்டுபிடிக்க இதை ஃபாலோ பண்ணுங்க..!

Tea adulteration : குடிக்கிற டீயில் கூட இப்போது கலப்படம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதனை நீங்கள் எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 19, 2024, 01:08 PM IST
  • டீயில் கலப்படம் இருக்கிறதா?
  • கண்டுபிடிக்க இருக்கும் வழிகள்
  • கலப்பட டீ குடிப்பது ஆபத்தானது
குடிக்கிற டீ கலப்படமானதா என்பதை கண்டுபிடிக்க இதை ஃபாலோ பண்ணுங்க..! title=

Tea adulteration Detection : டீ குடிக்காமல் அன்றைய பொழுதை தொடங்குபவர்களை இப்போதெல்லாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு டீ என்பது இந்தியாவில் இருக்கும் பெரும்பகுதி மக்களுக்கு ஒரு கலாச்சார பானமாகவே மாறிவிட்டது. இதில் கவலைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் டீயில் கலப்படம் அதிகரித்துவிட்டது.  இதைக் கண்டுபிடிக்க தோற்றம், வாசனை, சுவை உள்ளிட்ட சில குறிப்பிட்ட வழிகள் இருக்கின்றன

அல்காடாரா சோதனை:

வடிகட்டி காகிதத்தை (Filter Paper) எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது தேயிலை இலைகளை வைக்கவும். இப்போது சிறிது தண்ணீர் ஊற்றி காகிதத்தை ஈரப்படுத்தவும். இப்போது வடிகட்டி காகிதத்தை தண்ணீரில் கழுவவும். உண்மையான தேயிலை இலைகளாக இருந்தால், காகிதத்தில் கறை இருக்காது. கலப்பட தேயிலையாக இருந்தால் கரும்புள்ளிகள் தோன்றும்.

மேலும் படிக்க | முகத்தில் அதிக எண்ணெய் உள்ளதா? இந்த வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்யலாம்!

வடிகட்டி காகித சோதனை (Filter Paper Test) :

ஒரு காகிதத்தில் சிறிது தேயிலை இலைகள் அல்லது டீ தூளை எடுத்துக்கொள்ளவும். இப்போது குவிந்து கிடக்கும் தேயிலை இலைகளில் ஒரு சொட்டு தண்ணீரை விடவும். பல நேரங்களில் தேயிலை இலைகள் சாயம் பூசப்படுகின்றன. தண்ணீர் சேர்த்தால் அதிகப்படியான நிறம் வெளியேறி வடிகட்டி காகிதம் நிறம் மாறும். டீ தூளின் ஒரிஜினல் கலரையும் நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். உண்மையான தேயிலை இலைகளாக இருந்தால், நிறம் வெளியே வராது.

சுண்ணாம்பு பரிசோதனை:

ஒரு வெள்ளை பீங்கான் பேசினில் சிறிது சுண்ணாம்பை கரைத்து வைக்கவும். இப்போது சிறிது தேயிலை அல்லது டீ தூளை அதன் மீது தூவவும். சுண்ணாம்பில் சிவப்பு, கருப்பு நிறம் தோன்றினால், தேயிலை இலைகள் சாயமிடப்பட்டவை என்பதை உறுதி செய்து கொள்ளலாம். சுண்ணாம்பு நிறம் மாறவில்லை என்றால், அது உண்மையான டீ தூள் ஆகும்.

மேக்னட் டெஸ்ட்:

இரும்புப் பொடியும் தேயிலை இலைகளில் கலப்படமாக கலக்கப்படுகிறது. இதைப் புரிந்து கொள்ள, முதலில் ஒரு கண்ணாடி கொள்கலனில் சிறிது தேயிலை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதை ஒரு காந்தத்துடன் நகர்த்தவும். இரும்புத் தூள் இருந்தால், அது காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும். இல்லையெனில், தேயிலை இலைகள் தூய்மையானவை.

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உணவுப் பாதுகாப்புத்துறைக்கு அழைத்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். 

மேலும் படிக்க | நீண்ட நேரம் தூங்கினாலும் மீண்டும் தூக்கம் வருகிறதா? இந்த பிரச்சனை இருக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News