புதிய கம்பெனிக்கு மாறும் போது நோட்டீஸ் பீரியட் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

நோட்டீஸ் பீரியட் என்பது ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ பழைய நிறுவனத்தில் வேலை பார்க்க கூடிய காலம் ஆகும்.

Written by - RK Spark | Last Updated : Jul 2, 2024, 03:40 PM IST
  • பலருக்கும் நோட்டீஸ் பீரியட் பிரச்சனை இருக்கும்.
  • இந்த காலத்தில் கண்டிப்பாக வேலை பார்க்க வேண்டும்.
  • இதில் இருந்து சில வழிகளில் தப்பிக்கலாம்.
புதிய கம்பெனிக்கு மாறும் போது நோட்டீஸ் பீரியட் பிரச்சனையை சரி செய்வது எப்படி? title=

ஒரு வேலையில் இருந்து மற்றொரு புதிய வேலைக்கு மாறும் போது பலரும் சந்திக்க கூடிய பொதுவான பிரச்சனை என்னவென்றால் நோட்டீஸ் பீரியட் பிரச்சனை தான். ஒரு பணியாளர் ராஜினாமா செய்த பிறகு அந்த நிறுவனத்தில் கண்டிப்பாக வேலை பார்க்க வேண்டிய காலம் நோட்டீஸ் பீரியட் ஆகும். பல சமயங்களில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் போது நோட்டீஸ் பீரியட் என்ற பிரச்சினை வரும். இதனை சரி செய்ய சில முறைகளை பின்பற்றுவது உங்களுக்கு உதவும். ஒரு புதிய நிறுவனத்தில் நேர்காணல் முடிந்தவுடன் அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் முதலில் பணி சூழல், சம்பளம், வேலை நேரம் போன்றவற்றை பற்றி பேசுவோம். அதன் பிறகு பேச கூடிய முக்கியமான ஒன்று நோட்டீஸ் பீரியட் தான்.

மேலும் படிக்க | Budget 2024: புதிய வரி முறையில் வரி செலுத்துவோருக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள்

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது எப்படியாவது வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலை அசைப்போம். ஆனால் அதன் விளைவுகள் இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் போது தான் தெரியும். ஒரு நிறுவனத்தில் நோட்டீஸ் காலத்தை முடிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். நோட்டீஸ் பீரியட்டில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு கொள்கைகளை பின்பற்றுகின்றனர். சில நிறுவனங்களில் 15 நாட்கள் தொடங்கி, 2 மாதம், 3 மாதம் என நோட்டீஸ் பீரியட் வைத்துள்ளனர். உங்களின் பதவி பொருத்தும் நோட்டீஸ் பீரியட் மாறுபடும்.

நோட்டீஸ் பீரியட் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் சேரும் போது அந்த நிறுவனத்திற்கும் பணியாளருக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தம் தான் நோட்டீஸ் பீரியட். நிறுவனத்தில் சேரும் பட்சத்தில் கையெழுத்திடும் போது அதில் இது குறித்த தகவல் இடம்பெற்று இருக்கும். குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறும் போது நோட்டீஸ் பீரியட் காலத்தில் வேலை பார்க்க வேண்டும். அந்த சமயத்தில் முடிக்காமல் இருக்க கூடிய அனைத்து வேலைகளையும் முடித்து கொடுக்க வேண்டும். மேலும் அடுத்து அந்த இடத்திற்கு வேலைக்கு வருபவர்களுக்கு அந்த வேலையை பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். இதுபோன்ற பொறுப்புகளை முடிந்த பின்பு அதன் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி முடியும். ஒரு பணியாளர் நோட்டீஸ் பீரியட்டில் வேலை பார்க்கவில்லை என்றால் சம்பளம், எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் போன்றவை கிடைக்காது. நோட்டீஸ் பீரியட்டில் இருந்து தப்பிக்க பின்வரும் விஷயங்களை பின்பற்றலாம்.

நோட்டீஸ் பீரியட்டில் இருந்து தப்பிக்க

- உங்கள் நோட்டீஸ் பீரியட் காலத்தை குறைக்க விரும்பினால், அதற்கான முறையான காரணத்தை உங்கள் நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும். பணி காலத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை பொறுத்து உங்கள் நிறுவனம் உங்கள் கோரிக்கையை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். எனவே ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் போது தேவையில்லாமல் பொய் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். முறையான காரணத்தை தெரிவிக்கும் போது நிறுவனமும் உங்கள் கோரிக்கையை ஏற்க வாய்ப்புள்ளது.

- திடீரென்று ஒருவேலையை விட்டு மற்றொரு வேலைக்கு மாறும் போது உங்களது பணிகள் அப்படியே இருக்கும். அதனை குறுகிய காலத்தில் முடிக்க முடியாத போது தேவைப்படும் போது அதனை முடித்து கொடுக்கிறேன் என்ற உறுதிமொழியை கொடுங்கள். இது உங்கள் மீதான நேர்மறையான எண்ணத்தை அதிகரிக்க செய்யும். மேலும் நீங்கள் நோட்டீஸ் பீரியட்டில் இருந்து சுதந்திரமாக இருக்கலாம். ஒரு புதிய நிறுவனத்தில் சேரும் முன்பு நோட்டீஸ் பீரியட் பற்றிய முழு விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி தெரிந்து கொள்வது பின்னாளில் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

மேலும் படிக்க | கஜானாவை நிரப்பி சாதனை படைத்த ஜிஎஸ்டி வசூல்! ஜூன் மாதத்தில் சக்கைபோடு போட்ட வரி வசூல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News