PAN Card:இந்த மாற்றங்களை வீட்டில் இருந்தபடியே நிமிடங்களில் செய்யலாம், விவரம் இதோ

PAN Card:வருமான வரித்துறையின் கூற்றுப்படி, உடனடி பான் எண்ணுக்கு ஆதார் அட்டை மூலம் இ-பான் கார்டு (இ-பான்) வழங்க சுமார் 10 நிமிடங்கள் ஆகும். இந்த வசதி மூலம் இதுவரை சுமார் 8 லட்சம் பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2022, 07:55 PM IST
  • நமது நாட்டில் அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு இன்றியமையாத ஆவணமாகும்.
  • பான் கார்டை உருவாக்க, ஒருவருக்கு அடையாள அட்டை, முகவரிச் சான்றுமற்றும் பிறந்த தேதிக்கான சான்று இருப்பது அவசியமாகும்.
  • இந்த அடையாள அட்டைகளில், உங்களுக்கு பல விருப்பங்கள் வழங்கப்படும்.
PAN Card:இந்த மாற்றங்களை வீட்டில் இருந்தபடியே நிமிடங்களில் செய்யலாம், விவரம் இதோ title=

பான் கார்டு: நமது நாட்டில் அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு இன்றியமையாத ஆவணமாகும். கடன் வாங்கவோ, கிரெடிட் கார்டு வாங்கவோ அல்லது எங்காவது முதலீடு செய்யவோ, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவோ அல்லது வங்கியில் கணக்கு தொடங்கவோ பான் கார்டு அவசியம். 

நிரந்தர கணக்கு எண் என்பது 10-இலக்க எண்ணெழுத்து குறியீடாகும். இது ஒரு தனிநபரின் நிதி வரலாற்றின் முழுமையான பதிவை கொண்டிருக்கும். வருமான வரித் துறை அதை வெளியிடுகிறது. ஆனால் பான் கார்டில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது புகைப்படம் மங்கலாகவோ பழையதாகவோ இருந்தாலோ அதை நீங்களே மாற்றலாம். வெறும் 5 நிமிடத்தில் வீட்டில் இருந்தபடியே இதை செய்து முடிக்கலாம். 

பான் கார்டில் புகைப்படத்தை மாற்ற இந்த முறையை பின்பற்றவும்:

- NSDL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html-க்கு செல்லவும். 

- பேஜ் திறந்தவுடன், 'அப்ளிகேஷன் டைப்' ஆப்ஷனில் கிளிக் செய்து, Changes or correction in existing PAN Data என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும். 

- இப்போது கேடகரி மெனுவில் 'Individual' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- அதன் பிறகு தேவையான அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்து சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.

- இப்போது PAN விண்ணப்பத்திற்குச் சென்று KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- அதன் பிறகு 'Photo Mismatch' மற்றும் 'Signature Mismatch' என்ற ஆப்ஷன் தோன்றும்.

- இங்கே போட்டோவை மாற்ற Photo Mismatch விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- இப்போது தந்தை மற்றும் தாயின் பெயரை உள்ளிட்டு நெக்ஸ்ட் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | Mutual Fund முதலீடு செய்ய தேவையான ஆவணங்கள் குறித்த முழுவிவரம் 

- அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பிறப்பு இறப்புச் சான்று ஆகியவற்றை இணைக்கவும்.

- இதற்குப் பிறகு Declaration ஐ டிக் செய்து Submit பட்டனை கிளிக் செய்யவும்.

- புகைப்படம் மற்றும் கையொப்பத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான விண்ணப்பக் கட்டணம் இந்தியாவிற்கு ரூ. 101 (ஜிஎஸ்டி பிரத்தியேகமாக) மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள முகவரிக்கு ரூ. 1011 (ஜிஎஸ்டி பிரத்தியேகமாக) ஆகும்.

- முழுமையான செயல்முறைக்குப் பிறகு, 15 இலக்க ஒப்புகை எண் பெறப்படும்.

- விண்ணப்பத்தின் பிரிண்ட்அவுட்டை வருமான வரி பான் சேவை பிரிவுக்கு அனுப்பவும்.

- விண்ணப்பத்தை ஒப்புகை எண் மூலம் கண்காணிக்கலாம்.

உடனடி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க

வருமான வரித்துறையின் கூற்றுப்படி, உடனடி பான் எண்ணுக்கு ஆதார் அட்டை மூலம் இ-பான் கார்டு (இ-பான்) வழங்க சுமார் 10 நிமிடங்கள் ஆகும். இந்த வசதி மூலம் இதுவரை சுமார் 8 லட்சம் பான் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

என்ன ஆவணங்கள் தேவை?

பான் கார்டை உருவாக்க, ஒருவருக்கு அடையாள அட்டை, முகவரிச் சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று இருப்பது அவசியமாகும். இந்த அடையாள அட்டைகளில், உங்களுக்கு பல விருப்பங்கள் வழங்கப்படும். 

மேலும் படிக்க | Indian Railways: ஜூலை 1 முதல் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகைகள் கிடைக்குமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News