ஒரு நாள் எப்படி செல்ல இருக்கிறது என்பதை, அந்த நாளின் தொடக்கத்தை வைத்தே அறிந்து கொள்ளலாம். அது போல, நாம் உடல் எடையை குறைக்க நினைத்தால் அதற்கும் சில காலை பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன? இங்கே பார்ப்போம்.
1.எடையை சரி பாருங்கள்:
காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி கழிவறைக்கு சென்று வந்த பின்னர் வெயிட் மிஷினில் எடையை சரி பார்ப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன் எடையை சரிபார்த்தால் அது துல்லியமாக இருக்கும் என நம்பப்படுகிறது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இவ்வாறு செய்வதால், எந்த அளவிற்கு தங்களது முயற்சி கைக்கொடுத்திருக்கிறது என்பதை அவர்களால் கண்கூடாக பார்க்க முடியும். மேலும், உங்கள் உடல் எடையை சமமான அளவில் வைத்துக்கொள்ளவும் இது உதவும். இந்த பழக்கத்தினால், உங்கள் ஹெல்தி டயட்டில் இருந்து நீங்கள் திசை மாறாமல் இருக்கலாம்.
2.தண்ணீர் அருந்துங்கள்:
காலையில் எழுந்தவுடன் உணவு அருந்துவதற்கு முன்னர் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க வழி வகுக்குமாம். தண்ணீரில் உடல் எடையை கூட்டும் எந்த சத்துக்களும் இல்லை. மேலும், உங்களுக்கு தாகத்தினால் பசியை ஏற்படுவதையும் இந்த பழக்கம் தவிர்க்கிறது. இதனால், காலையில் அதிகம் சாப்பிடாமல் தப்பிக்கலாம். தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள மெட்டபாலிச சத்துக்கள் அதிகரித்து கொழுப்பு குறையும்.
3.உடற்பயிற்சி:
காலையில் சாப்பிடுவதற்கு முன்னர் உங்கள் உடலுக்கு ஏற்ற, உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. வெறும் வயிற்றில் வர்க் அவுட் செய்வது உடல் எடையை வேகமாக குறைக்க வழிவகுக்குமாம். காலை உணவிற்கு முன்னால் வர்க்-அவுட் செய்வது உங்களது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும் என கைதேர்ந்த மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | இந்த விதையோட தண்ணீர் நல்லதுனு நெனச்சு குடிச்சிடாதீங்க... அப்புறம் அவ்வளவுதான்
4.புரத சத்து நிறைந்த காலை உணவுகள்:
புரத சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் அதிக நேரம் நீங்கள் பசியில்லாமல் இருக்கலாம். புரதம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், சாப்பிட்டு நீண்ட நேரம் ஆனாலும் வயிறு காலியாக உள்ளது போன்ற உணர்வே இருக்காது. புரதம் நிறைந்த உணவுகளா, உங்கள் உடலில் கொழுப்பு சேராது. உடலில், ஆற்றல் சக்தியை மேம்படுத்தவும் நீண்ட நேரம் தொய்வடையாமல் இருக்கவும் புரதம் நிறைந்த உணவுகள் உதவும். முட்டை, மூக்கடலை, பனீர் போன்றவை புரதம் நிறைந்த காலை உணவு வகைகளுள் ஒன்று.
5.பிற வேலைக்கான உணவுகளை முடிவு செய்யுங்கள்:
தினமும் காலையில் எழுந்தவுடன், அந்த நாளில் என்ன சாப்பிட வேண்டும் என்ற பட்டியலை தயார் செய்யுங்கள். இதனால், கலோரி அதிகமாக இருக்கும் உணவை நீங்கள் சாப்பிடுவதில் இருந்து தப்பிக்கலாம். இப்படி பட்டியல் போடுவதால், உங்களுக்கே தெரியாமல் நீங்கள் துரித உணவுகளை சாப்பிடுவதையும் குறைத்து கொள்வீர்கள். உடல் எடை வேகமாக குறையவும் இந்த பழக்கம் வழிவகுக்கும்.
6.சூரிய ஒளி படுவது முக்கியம்:
உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க நல்ல உணவுகளை உட்கொள்வது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே போல நம் மீது சூரிய ஒளி படுவதும் முக்கியம். உங்கள் சருமத்தில் சூரிய ஒளி படுவதால், குறிப்பிட்ட அளவு கொழுப்பு குறையும் என சில மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காலையில் சூரிய ஒளியில் நிற்பவற்கள் பிறரை விட கொஞ்சம் உடல் எடை குறைவாகவும், மெலிந்த தேகத்துடனும் காணப்படுவர்.
மேலும் படிக்க | நீண்ட ஆயுளுக்கு..காலையில் எழுந்ததும் ‘இந்த’ 4 விஷயங்களை செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ