பழைய நகைகள் பளிச்சென்று இருக்க சூப்பர் டிப்ஸ்!

நாம் நகைகளை அடிக்கடி பயன்படுத்துவதால் அதில் அழுக்கு படித்து எளிதில் அதன் தன்மை மங்கிவிடும் என்பதால் வீட்டிலேயே சில எளிய முறைகளை பயன்படுத்தி நகைகளை சுத்தம் செய்யலாம்.  

Written by - RK Spark | Last Updated : Mar 28, 2023, 08:46 AM IST
  • நகைகளை சுத்தம் செய்ய நீரும், சோப்பும் போதுமானது.
  • மென்மையான டூத்ப்ரஷ் பயன்படுத்தி அழுக்கினை அகற்றலாம்.
  • வெள்ளி நகையை கொதிக்கும் நீரில் போட்டுவிட வேண்டும்.
பழைய நகைகள் பளிச்சென்று இருக்க சூப்பர் டிப்ஸ்!

உங்களுக்குப் பிடித்த நகைகள் சற்று மந்தமாகவும், மங்கலாகவும் உள்ளதா? அப்படியானால், அதனை கடைகளுக்கு எடுத்து சென்று சுத்தம் செய்வதை நிறுத்துங்கள் - ஏனென்றால் வீட்டில் நகைகளை சுத்தம் செய்ய என்ன பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். சாதாரண பழைய சோப்பு மற்றும் தண்ணீர் எந்த வகையான நகைகளுக்கும் சிறந்தது, மேலும் தங்கம், வெள்ளி மற்றும் ரத்தின நகைகளுக்கான பிற விருப்பங்களையும் இங்கு பார்க்கலாம். 

- நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நகைகளை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரும், சோப்பும் போதுமானது.  வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் டிஷ் வாஷ் அல்லது வேறு சோப்பை சேர்க்கவும்.  அதில் தோடு, மோதிரம், நெக்லஸ் போன்ற நகைகளை ஊறவைத்து பல்துலக்கும் பிரஷ்ஷை வைத்து தேய்த்து அழுக்கினை நீக்கலாம்.

மேலும் படிக்க | ITR Advice: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்

- சாதாரண தண்ணீரில் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து கலந்து அதில் நகைகளை சிறிது நேரம் நனைத்து வைத்து பின்னர் மென்மையான டூத்ப்ரஷ் பயன்படுத்தி அழுக்கினை அகற்றலாம்.  ஆனால் இந்த முறையை அதிக வேலைப்பாடு கொண்ட நகைகள், விலையுயர்ந்த நகைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.

- வெள்ளி நகைகளை பளிச்சென்று மாற்ற ஒரு அலுமினிய தகடில் பேக்கிங் சோடா சேர்த்து அதனுள் வெள்ளி நகையை வைத்து மூடி கொதிக்கும் நீரில் போட்டுவிட வேண்டும்.  5 நிமிடங்கள் கழித்து அதனை வெளியில் எடுத்து டூத்ப்ரஷ் அள்ளாது துணியால் தேய்த்து எடுக்க நகை பளிச்சிடும்.

- வைரம் போன்ற கற்கள் கொண்ட நகைகளை சுத்தம் செய்து பளிச்சென்று மாற்ற சோப்பு நீர் முறை தான் சிறந்தது.  சோப்பு நீரில் ஊறவைத்து டூத்ப்ரஷ் வைத்து தேய்த்து சுத்தம் செய்யலாம் அல்லது க்ளப் சோடாவில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் நகையை சுத்தம் செய்யலாம்.

- சுத்தம் செய்ததும் நகைகளை நன்கு உலர வைக்க வேண்டியது முக்கியம், பழைய நகைகளை சுத்தம் செய்ய அதிகம் அழுத்தம் கொடுத்து தேய்க்காமல் மென்மையான குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய டூப்ரஷ்ஷையே பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஏடிஎம் கார்டு மோசடி: உங்கள் டெபிட் கார்டை எவ்வாறு பாதுகாப்பது? இதோ வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News