Virgin Galactic: விண்வெளிக்கு பயணம் செல்ல ஆசையா? டிக்கெட் விலை என்ன தெரியுமா?

உங்களுக்கு விண்வெளிக்கு பயணம் செல்ல விருப்பமா? விருப்பம் இருந்தால் மட்டும் போதாது, டிக்கெட் விலை தான் கொஞ்சம் அதிகம். வெறும் 3 கோடி ரூபாய் தான்… தயார் என்றால், விண்கலம் உங்களை ஏற்றிச் செல்லத் தயார்…

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 7, 2021, 05:54 PM IST
  • விண்வெளிக்கு பயணம் செல்ல ஆசையா?
  • டிக்கெட் விலை என்ன தெரியுமா?
  • 3 கோடி ரூபாய் மட்டும் தான்...
Virgin Galactic: விண்வெளிக்கு பயணம் செல்ல ஆசையா? டிக்கெட் விலை என்ன தெரியுமா? title=

பயணங்கள் என்றும் முடிவதில்லை. வாழ்க்கையே ஒரு பயணம் என்று சொல்வார்கள். விரும்பும் இடத்திற்கு நினைத்த உடனே போய்விட மாட்டோமா என்ற ஏக்கத்திற்கு போக்குவரத்து வசதிகள் போதுமான அளவுக்கு வந்துவிட்டன.

தற்போது விண்வெளிக்கு சுற்றுலா செல்வது என்ற விருப்பம் மக்களிடையே சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. உங்களுக்கு விண்வெளிக்கு பயணம் செல்ல விருப்பமா? விருப்பம் இருந்தால் மட்டும் போதாது, டிக்கெட் விலை தான் கொஞ்சம் அதிகம். வெறும் 3 கோடி ரூபாய் தான்… தயார் என்றால், விண்கலம் உங்களை ஏற்றிச் செல்லத் தயார்…

ஜூலை 11 அன்று, பிரிட்டனை சேர்ந்த 70 வயதான கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கான சுற்றுலா பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். அவரது நிறுவனமான வெர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic), விண்வெளிக்கான அதன் முதல் வணிக விமான சேவையை 2022ஆம்  ஆண்டில்  தொடங்க தயாராக உள்ளது.
இந்த விண்வெளி விமானத்தில் பயணிக்க 3 கோடி ரூபாய் கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also Read | புழுதி புயலை எட்டி பார்த்த விண்வெளி வீரர் எடுத்த பூமியின் புகைப்படம்

சில வருடங்களுக்கு முன் விர்ஜினின் விண்கலத்தில் பயணிப்பதற்காக முன்பதிவு கட்டணம் 200,000 முதல் $ 250,000 மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது விலைவாசி உயர்வு, விண்வெளிப் பயணத்திலும் எதிரொலிக்கிறது. எனவே, பயணச்சீட்டின் விலை இரட்டிப்பாகியுள்ளது. இந்த செய்தி, சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 

ரிச்சர்ட் பிரான்சன் வெற்றிகரமாக விண்வெளிக்கு சுற்றுலா சென்று வந்ததைத் தொடர்ந்து விண்வெளி சுற்றுலா வளர்ந்து வருகிறது. எனவே, இதுவரை அறியப்படாத பிரதேசத்திற்கு பயணம் செல்லும் கனவைக் கொண்டிருப்பவர்கள் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தும் அந்த அனுபவத்தைப் பெறத் தயாராக இருக்கின்றனர். 

ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, விண்வெளி விமான டிக்கெட் விற்பனை தொடங்குவதாக வியாழக்கிழமை விண்வெளி விமான நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் (Virgin Galactic) அறிவித்தது. இருக்கை ஒன்றுக்கு 450,000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 3,33,51,772 ரூபாய் என்று நிர்ணயித்துள்ளது.

Also Read | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

விர்ஜின் கேலக்டிக் மக்களை விண்வெளிக்கு பறக்க அமெரிக்க விமானப் பாதுகாப்பு கட்டுப்பாட்டாளரிடமிருந்து (U.S. aviation safety regulator) ஒப்புதல் பெற்றது. இப்போதைக்கு, நிறுவனம் மூன்று வகையான டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. ஒற்றை இருக்கை, பல இருக்கை தொகுப்பு மற்றும் ஒரு முழு விமானத்தையே வாடகைக்கு எடுப்பது என மூன்று விதமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.

டிக்கெட் விற்பனை தொடங்கும் போது காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் 1,000 பேருக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும். அப்படியென்றால், இத்தனை கோடி ரூபாய் செலவளித்து பயணம் செல்ல நீண்ட வரிசை காத்துக் கொண்டிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம் அதுதான் உண்மை.  

"இன்று முதல் விண்வெளிப் பயணத்திற்கானா டிக்கட் விற்பனை மீண்டும் தொடங்குவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விண்வெளியின் அதிசயத்தைக் காட்ட நாங்கள் முயற்சிக்கிறோம். முற்றிலும் புதிய தொழில் இது, வித்தியாசமான பயண அனுபவத்திற்கான கதவைத் திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று Virgin Galactic நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கோல்க்ளேசியர் தெரிவித்துள்ளார்.

Also Read | இன்னும் 30 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளாக ஆவார்கள்: விஞ்ஞானிகள்

வெர்ஜின் கேலக்டிக் அதன் முதல் வணிக விண்வெளி விமான சேவையில்,  2 டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கும். இதற்காக அறிவிக்கப்பட்ட போட்டிக்காக பதிவுசெய்தவர்களில் குலுக்கல் முறையில் அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிர்ஷ்ட வெற்றியாளர்களின் விண்வெளி பயண அனுபவம் எச்டி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும். அதுமட்டுமல்ல அவர்களுக்கு ஜன்னல் இருக்கையும், சிறப்பு கண்ணாடி ஒன்றும் வழங்கப்படும், அதில் அவர்கள் தங்களை புவி ஈர்ப்பு இல்லாத சூழலில் மிதப்பதைக் காணலாம்.

விண்வெளிப் பயணம் மேற்கொள்ள விரும்புவர்கள், செப்டம்பர் முதல் தேதிக்குள் டிக்கெட் முன்பதிவு செய்துவிடவும்.  அதற்கு பின் இந்த சலுகை உங்களுக்குக் கிடைக்காது. விண்வெளிப் பயண முன்பதிவுக்கு முந்திக் கொள்ளுங்கள்!

Also Read | நீங்களும் விண்வெளிக்கு இலவசமாக பயணிக்கலாம்; பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News