நீங்கள் பான்-ஆதார் எண்ணை இணைக்கும் போது இந்த பிரச்சனை வரலாம் -எச்சரிகை

பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் போது, ​​உங்கள் "இணைப்பு தோல்வியடைந்தது" என்ற செய்தியை அடிக்கடி வருவது தெரியவந்துள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Oct 3, 2021, 12:19 AM IST
  • பான்-ஆதார் இணைப்பை இரண்டு வழிகளில் செய்யலாம்.
  • பான்-ஆதார் தகவல்கள் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே இணைக்க முடியும்.
  • பான் எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான கடைசி தேதி 30 செப்டம்பர் 2021.
நீங்கள் பான்-ஆதார் எண்ணை இணைக்கும் போது இந்த பிரச்சனை வரலாம் -எச்சரிகை

பான்-ஆதார் இணைப்பு: பான் எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கான கடைசி தேதி 30 செப்டம்பர் 2021 ஆகும். இந்த காலக்கெடுவிற்குள் நீங்கள் பான்-ஆதார் இணைக்க முடியாவிட்டால், உங்கள் பான் எண் (Permanent account number) செயலற்றதாக ஆகிவிடும். பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் போது, ​​உங்கள் "இணைப்பு தோல்வியடைந்தது" என்ற செய்தியை அடிக்கடி வருகிறதா? இத்தகைய சூழ்நிலையில், இது ஏன் நடக்கிறது மற்றும் இந்த தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கு புரியவில்லை.

இணைப்பு தோல்வி செய்தி எப்போது வரும்:
பல முறை பான்-ஆதார் இணைக்கும் (Pan-Aadhaar Link) போது, ​​பலர் இணைப்பு தோல்வி என்ற சிக்கலுக்கு ஆளாகிறார்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி, பான் எண் மற்றும் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் வெவ்வேறாக இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற பிரச்சனைகள் வருகிறது. இதன் அர்த்தம், பான் மற்றும் ஆதார் இரண்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே நீங்கள் பான்-ஆதார் இணைக்க முடியும்.

பெயர், பிறந்த தேதி பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது?
நீங்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் போது, ஆதார் அட்டையின் படி பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை நிரப்பும்போது, ​​உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வருமான வரித்துறை (Income Tax Department) ஓடிபி (OTP) அனுப்பும். அதனை உள்ளீட்டு இணைப்பு செயல்முறை முடிக்க முடியும். ஒருவேளை உங்கள் பிறந்த தேதி பொருந்தவில்லை என்றால், முதலில் உங்கள் ஆதார் அட்டை தரவைப் புதுப்பிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ALSO READ | 5 நிமிடங்களில் இந்த தளத்திலிருந்து e-PAN-ஐ பதிவிறக்கம் செய்யலாம்

இந்த வழியிலும் இணைக்கலாம்:
வருமான வரி இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களின்படி, பான்-ஆதார் இணைப்பை இரண்டு வழிகளில் செய்யலாம். முதலாவது எஸ்எம்எஸ் வசதி மூலமும், இரண்டாவதாக வரித்துறையின் இணையதளத்தில் உள்ள இ-ஃபைலிங் போர்டல் மூலமும் செய்யலாம். எஸ்எம்எஸ் மூலம் பான்-ஆதார் இணைக்க, நீங்கள் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு பான் ஆதார் விவரங்களை எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். இந்த வடிவம் UIDPAN <SPACE> <12 இலக்க ஆதார்> <இடம்> <10 இலக்க PAN> ஆகும். 

அதே நேரத்தில், ஈ-போர்டல் மூலம், நீங்கள் www.incometax.gov.in/iec/foportal/ தளத்தை கிளிக் செய்தால், ஆதார் இணைப்புக்கான விருப்பத்தைப் பெறுவீர்கள். அதில் நீங்கள் பான், ஆதார், பெயர் (ஆதார் அட்டையில் உள்ளது போல) மற்றும் மொபைல் எண் விவரங்களை கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு, அடுத்தடுத்து சில செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் பான் அட்டை ஆதார் கார்டுடன் இணைக்கப்படும்.

ALSO READ | SBI எச்சரிக்கை! 30 செப்டம்பர் 2021 க்குள் ஆதார்-பான் இணைக்கவும்

பான் அட்டை செயல்படாததாகிவிடும்:
வருமான வரி விதிகளின்படி, செப்டம்பர் 30 க்குள் நீங்கள் பான்-ஆதார் இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் செல்லாததாகிவிடும். இதன் காரணமாக, உங்கள் வங்கி உட்பட பல இடங்களில் உங்கள் KYC பாதிக்கப்படலாம். ஆன்லைனில் ஐடிஆர் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படலாம். மேலும் வருமான வரி ரிட்டன் தொகையை பெற முடியாது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News