பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்ற நாடா? அரசு நிராகரிப்பு!

உலக அளவில் பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தாமஸ் ரியூடர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

Last Updated : Jun 28, 2018, 09:49 AM IST
பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்ற நாடா? அரசு நிராகரிப்பு! title=

உலக அளவில் பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தாமஸ் ரியூடர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டிருந்தது.. 

தாமஸ் ரியூடர்ஸ் பவுண்டேஷ வெளியிட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எந்த கருத்து கணிப்பும் நடத்தப்படாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த விபரம் இந்தியா மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. 

15 முதல் 19 வயதிலான பெண்கள் தாய்மை அடைவது 2015 - 2016 ம் ஆண்டிலேயே 7.9% குறைக்கப்பட்டு விட்டது. குழந்தை திருமணம் வெகுவாக குறைக்கப்பட்டு பெண்களுக்கான தக்க உரிமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்கார குற்றங்கள் அடிப்படையில், இந்தியாவில் 1000 பேருக்கு 0.03% தான் உள்ளது. அமெரிக்காவில் 1.2 சதவீதம் பலாத்காரங்கள் நடக்கின்றன. பெண்களுக்கான திருமண வயது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 

 இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News