அக்., 2 முதல் ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை..!!

அக்டோபர் 2 முதல் ரெயில் நிலையங்களில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை!!

Last Updated : Aug 22, 2019, 10:36 AM IST
அக்., 2 முதல் ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை..!! title=

அக்டோபர் 2 முதல் ரெயில் நிலையங்களில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை!!

அக்டோபர் 2 முதல் 50 மைக்ரான் தடிமன் கொண்ட ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்குமாறு ரயில்வே அமைச்சகம் புதன்கிழமை அனைத்து ரயில்வே பிரிவுகளுக்கும் உத்தரவிட்டது. அக்டோபர் 2 முதல் நாட்டில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக், இந்திய ரயில்வே ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, அது விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களை ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் பயன்படுத்துவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியது. அதன்பேரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. 
இந்தநிலையில், IRCTC அனுமதியுடன் செயல்படும் கடைகளில் தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்த புகாரின் பேரில் ரெயில்வே வாரியம் தெற்கு ரெயில்வேக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. இதையடுத்து அந்த சுற்றறிக்கையை அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் தெற்கு ரெயில்வே அனுப்பி உள்ளது.

அந்த சுற்றறிக்கையில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்களை பொடியாக்கக்கூடிய எந்திரங்கள் வைக்க வேண்டும். ரெயில் நிலையங்களில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. கட்டாயமாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ரெயில் நிலையங்களிலும், நீண்ட தூரம் செல்லும் ரெயில்களிலும் செயல்படும் உணவகங்கள் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், ரெயில் நிலையங்களில் சுலபமாக மறுசுழற்சி செய்யக்கூடிய பைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நடைமுறை நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை ரெயில் நிலையங்களில் பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே வாரியம் எச்சரித்துள்ளது.

 

Trending News