ஒவ்வொருவருக்கும் தங்களது திருமணத்தை சிறப்பாகவும், தனித்துவமாகவும் நடத்த வேண்டும் என்பதில் ஆர்வம் இருக்கும். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த ஜோடிகளான தினேஷ் மற்றும் ஜனகநந்தினி ஆகியோர் தங்களது திருமண வரவேற்பை Metaverse முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். Metaverse என்பது அசலை போலவே போலியான உருவத்தை உருவாக்கும் ஒரு 3D தொழில்நுட்பமாகும். இவர்களின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது.
ALSO READ | ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் விதிகளை மீறியவர்களிடம் ரூ.7,89,400 வசூல்!
தினேஷ் IIT Madras-ல் ப்ராஜெக்ட் மேனேஜராக உள்ளார், இவருக்கும் ஜனகநந்தினிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு தற்போது திருமணம் வரை வந்துள்ளது. இவர்களுக்கு பிப்ரவரி-6ம் தேதி சிவலிங்கபுரம் கிராமத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டு இந்த Metaverse முறையை தேர்ந்தெடுத்தனர்.
இதுகுறித்து தினேஷ் கூறுகையில், எனக்கு திருமணம் நிச்சயம் ஆன உடனேயே நான் Metaverse திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டேன். இதற்கு என் வருங்கால மனைவியும் விருப்பம் தெரிவித்தார். நான் கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ளேன், blockchain மெட்டாவர்ஸின் அடிப்படை தொழில்நுட்பம் என்பதால், எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், Metaverse-ல் வரவேற்பு நடத்த நினைத்தேன் என்று கூறியுள்ளார்.
ஹாரிபாட்டர் கோட்டை பின்னணியில், மெல்லிய இசையில் தொடங்கும் இந்த திருமண நிகழ்வில் மணமக்கள் தினேஷ் மற்றும் ஜனகநந்தினி அவர்களுக்கான பாரம்பரிய உடையணிந்த அவதாரை தேர்ந்தெடுப்பார்கள், இந்த திருமண நிகழ்வில் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் கணினி மூலம் login செய்து அவர்களுக்கான அவதாரை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த திருமண வரவேற்பில் கலந்து கொள்ளலாம். டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக கிரிப்டோகரன்சி போன்றவற்றை மணமக்களுக்கு பரிசாக வழங்கலாம். தினேஷ் தனது திருமண அழைப்பிதழ் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதுடன், பல மக்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்குள் நான் பயன்படுத்தியது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதுதான் இந்தியாவின் முதல் Metaverse திருமணம் என்றும் கூறியுள்ளார்.
ALSO READ | ஆயுளைக் கூட்டும் ’சிரிப்பு மந்திரம்’ - ஜாலியாக பண்ணுங்க..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR