International Tiger Day 2021: துணிச்சலின் சின்னங்களான புலிகளைக் காப்போம்!!

வீரத்தின் உருவாய், கம்பீரத்தின் காட்சியாய், துணிச்சலின் சாட்சியாய் உலா வரும் விலங்குகள் புலிகள். அசாத்திய அறிவுத்திறன் கொண்ட விலங்காக ராஜ நடை போட்டு காட்டை சுற்றும் சூறாவளிகள் புலிகள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2021, 11:16 AM IST
International Tiger Day 2021: துணிச்சலின் சின்னங்களான புலிகளைக் காப்போம்!! title=

புதுடெல்லி: வீரத்தின் உருவாய், கம்பீரத்தின் காட்சியாய், துணிச்சலின் சாட்சியாய் உலா வரும் விலங்குகள் புலிகள். அசாத்திய அறிவுத்திறன் கொண்ட விலங்காக ராஜ நடை போட்டு காட்டை சுற்றும் சூறாவளிகள் புலிகள்.

சில ஆயிரம் வகை புலிகள் (Tiger) மட்டுமே காடுகளில் எஞ்சியுள்ள நிலையில், வீரத்தின் சின்னமான புலி வகைகளின் பாதுகாப்புக்கு நாம் அனைவரும் பணியாற்ற வேண்டியது அவசியம் ஆகிவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று, புலிகளைப் பாதுகாப்பதற்கும் வனவிலங்குகளின் சட்டவிரோத வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு வைல்ட் ஃபார் லைஃப் பிரச்சாரத்தின் போது, ​​ஐக்கிய நாடுகள் சபை வனவிலங்கு குற்றங்களுக்கு எந்த வித கரிசனமும் காட்டக்கூடாது என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.

சட்டவிரோத வர்த்தகத்திற்காக புலிகள் வேட்டையாடப் படுவதால், பெரும்பாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த பல தசாப்தங்களாக, சிங்கப்பூர், ஹாங்காங், கொரிய தீபகற்பம், இந்தோனேசியாவின் ஜாவா, கம்போடியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளில் புலிகள் அழிந்துகொண்டு வருகின்றன.

சர்வதேச புலிகள் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி (PM Modi) ட்வீட் செய்துள்ளார்:

ALSO READ: ட்விட்டரில் அசத்தும் பிரதமர் மோடி: 70 மில்லியனைத் தாண்டியது ஃபாலோயர்களின் எண்ணிக்கை 

TX2 புலிகள் செயல்திட்டம்

TX2 இலக்கு என்பது 2022 ஆம் ஆண்டில் உலகின் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான உலகளாவிய உறுதிப்பாடாகும். உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF) கருத்துப்படி, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு புலிகளின் எண்ணிக்கை 100,000 ஆக இருந்தது. ஆனால் அது இப்போது மிகக் குறைந்துவிட்டது. 2010 இல் புலிகளின் எண்ணிக்கை 3,200 ஆக இருந்தது. இந்த போக்கு தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில் புலிகளே இருக்காது.

இந்தியாவில் புலி பாதுகாப்பு

புலிகளைப் பாதுகாக்க 1973 ஆம் ஆண்டில் இந்திய அரசு ’பிராஜெக்ட் டைகர்’-ஐத் தொடங்கியது. 2008 ஆம் ஆண்டில், வேட்டையாடும் நடவடிக்கைகளைத் தடுக்க நாடு முழுவதும் ஒரு சிறப்பு புலி பாதுகாப்பு படையை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. ஜூலை 28, 2020 அன்று சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டபோது, ​​அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "உலக அளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது" என்று கூறியிருந்தார்.

புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

புலிகள் மற்றும் பிற வன விலங்குகள் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புக்கு எந்த வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன என்பதை மக்களுக்கு நாம் உணர்த்த வேண்டும். நாம் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டு புலி பாதுகாப்பு குறித்து விவாதங்களை நடத்த வேண்டும்.

தேசிய பூங்காக்கள் அல்லது புலிகள் சரணாலயங்களைப் பார்வையிடும்போது, ​​சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளைத் தொந்தரவு செய்யவோ, அவற்றின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கவோ கூடாது.

ALSO READ: பாயும் புலியும் கிச்சு-கிச்சு மூட்டினால் சிரிக்கும், வைரலாகும் Tiger Laughing Video

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News