Lifestyle Tips In Tamil: நகரங்களில் இப்போதெல்லாம் பாக்கெட் பால்களின் பயன்பாடுகள்தான் அதிகமாக இருக்கிறது. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் கூட பால் பாக்கெட்டுகளின் பயன்பாடுகள்தான் இருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசின் ஆவின் தொடங்கி பல்வேறு தனியார் தயாரிப்புகளும் சந்தையில் கிடைக்கின்றன. வழக்கமாக பாக்கெட் பாலோ அல்லது கறந்த பாலோ, பாலை வாங்கிய உடன் அந்த காய்ச்சுவதுதான் மக்களின் பழக்கமாக உள்ளது. பாலை காய்ச்சாமல் குடித்தால் பெற்றோர் சிறுவயதில் இருந்தே கண்டிப்பார்கள். பாலை காய்ச்சிய பின்னர்தான் குடிக்க வேண்டும் என்பது நமக்கு சொல்லிக்கொடுக்கப்படும் பாடங்களில் ஒன்றாக உள்ளது.
அப்படியிருக்க பாக்கெட் பாலை காய்ச்சிதான் குடிக்க வேண்டும் என்றில்லை, காய்ச்சாமலும் குடிக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது. பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பாலை காய்ச்சி குடிப்பதால் அதன் ஊட்டச்சத்துக்கள் போய்விடும் என்றும் அதனால் காய்ச்சாமலே எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். இதன் பின்னணி குறித்து இங்கு முழுவதுமாக அறிந்துகொள்ளலாம்.
பாலை கொதிக்க வைப்பது ஏன்?
இந்திய மக்கள் பால் காய்ச்சுவதை ஒரு பண்பாடாக வைத்துள்ளனர். புது வீட்டுக்கு சென்றாலோ அல்லது ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் முன்னரோ பால் காய்ச்சி அதை பொங்கவைப்பது வழக்கமாக வைத்துள்ளனர். அதுவும் உள்ளூரில் கறந்த பாலை பெறும்போது அவர்கள் அதில் இருக்கும் உடலுக்கு தீங்குவிளைவுக்கும் கிருமிகள், நுண்ணுயிர்களை அழிக்க பாலை கொதிக்க வைப்பார்கள். பாலை கொதிக்க வைத்தால் அதன் ருசி சற்று மாறுபடும். டீ, காபி போடுவதற்கு பாலை கொதிக்கவைப்பார்கள். அதில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் அதனை போக்கவும் பாலை கொதிக்க வைப்பார்கள். பால் காய்ச்சுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
மேலும் படிக்க | எந்த வயதிலும் மூட்டு வலி வரலாம்... இந்த 3 பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்ளாதீர்கள்!
ஆனால், தற்போது கறந்த பால் இல்லாமல் பாக்கெட் பால் வந்த பின்னரும் இந்த பழக்கம் தொடர்கிறது. இந்தியாவில் நிலவும் வெப்பமண்டல் தட்பவெப்ப நிலை மற்றும் கிராமப்புறங்களில் போதுமான குளிர்சாதன வசதி இல்லாததும் பாக்கெட் பாலை கொதிக்க வைக்க வழிசெய்கிறது. பாலை 100 டிகிரிக்கு மேல் காய்ச்சினால்தான் அதன் கொதிநிலையை அடையும். அப்போது அதில் இருக்கும் Salmonella அல்லது Clostridium போன்ற நுண்ணுயிர்கள் அழிந்துவிடும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
பாலை காய்ச்சினால் என்னவாகும்?
பால் காய்ச்சுவதால் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் அழிவது மட்டுமின்றி கொழுப்பு மூலக்கூறுகள் சிதைவடையும், புரதங்கள் குறைக்கப்பட்டு பால் செரிமானம் ஆவதை விரைவாக்கும். பாலை காய்ச்சுவதால் அதில் இருக்கும் லாக்டோஸ் கேரமலைஸ் ஆகி ஒரு இனிப்பு தன்மையை தரும். காய்ச்சுவதால் பால் கொழுகொழுப்பை பெரும். மேலும் பால் கெட்டுப்போகும் அபாயம் குறையும். அதை நீங்கள் பின்னரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாக்கெட் பாலை கொதிக்க வைக்க வேண்டுமா?
இருந்தாலும் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பாலை காய்ச்ச வேண்டும் என அவசியம் இல்லை என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். காரணம், பதப்படுத்தப்படும் போதே அந்த பாலை போதுமான அளவுக்கு வெப்பமாக்கி, கிருமிகளை கொள்ளும் வழிமுறைகளை தயாரிப்பாளர்கள் செய்திருப்பார்கள். எனவே, பதப்படுத்தப்பட்ட பாலை நீங்கள் கிருமிகளை கொல்வதற்காக காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.
மேலும் படிக்க | 50 வயசு ஆனவங்க உங்க டையட்டில் இந்த 4 உணவுகளையும் சேர்த்துக்கோங்க
அதேநேரத்தில் பதப்படுத்தப்படாத பாக்கெட் பாலை கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பதப்படுத்தப்பட்ட பால்தான் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டும் சரியாக குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படாமலோ, பாக்கெட் சேதமடைந்திருந்தாலோ அதனை முன்னெச்சரிக்கையாக காய்ச்சுவதில் தவறில்லை என்றும் கூறுகின்றனர்.
கொதிக்க வைத்தால் ஊட்டச்சத்து கிடைக்காது
பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலை காய்ச்சுவதால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உங்களுக்கு கிடைக்காது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பாலை காய்ச்சுவதால் கெட்ட கிருமிகள் மட்டுமின்றி, உடலுக்கு நன்மை அளிக்கும் நுண்ணுயிர்களும் அழிந்துவிடும் என்கின்றனர். இதனால் போதிய ஊட்டச்சத்து கிடைக்காது என்கின்றனர். பாலில் உள்ள வைட்டமிண் பி மற்றும் சி அதனை காய்ச்சுவதால் குறைந்து போகும் என்றும் புரதம் குறைக்கப்படுவதால் அதனால் கிடைக்கும் நன்மையை குறைந்துவிடும் என எச்சரிக்கின்றனர்.
எனவே பாக்கெட் பாலை 100 டிகிரி அளவுக்கு கொதிக்க வைக்காமல், இதமான சூட்டில் 4-5 நிமிடங்களுக்கு மட்டும் கொதிக்க வைத்து குடிக்கலாம் என்றும் இப்படி குடித்தால் எவ்வித ஊட்டச்சத்தும் குறையாது எனவும் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலை கொதிக்க வைத்த பின்னர்தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்கின்றனர் வல்லுநர்கள்.
மேலும் படிக்க | முட்டையை இப்படி கூட பயன்படுத்தலாமா? மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ