உள்ளாட்சி தேர்தல் நெருங்குகிறது! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

அனைவரிடமும் வாக்களர் அடையாள அட்டை இருப்பது மிக அவசியாமாகும். அப்பொழுது தான் வாக்களிக்க முடியும். தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக என்பதை சரிபார்க்க விரும்பினால், சில எளிய வழியை பின்பற்றி சரிபார்க்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 07:40 PM IST
  • அனைவரிடமும் வாக்களர் அடையாள அட்டை இருப்பது மிக அவசியாமாகும்.
  • வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பது முக்கியமானது.
  • வாக்காளர் அட்டை என்பது மிக முக்கியமான சான்றாகும்.
உள்ளாட்சி தேர்தல் நெருங்குகிறது! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? title=

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. அந்த மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 என 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் (Rural Local Elections) நடத்தப்படுவதால், அனைவரிடமும் வாக்களர் அடையாள அட்டை இருப்பது மிக அவசியாமாகும். அப்பொழுது தான் வாக்களிக்க முடியும். வாக்காளர்கள்,  தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக என்பதை சரிபார்க்க விரும்பினால், சில எளிய வழியை பின்பற்றி சரிபார்க்கலாம்.

18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் (Indian citizen) வாக்குரிமை உண்டு. இதற்காக அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை (voter ID card) வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த வாக்காளர்களிடம் உள்ள வாக்காளர் அட்டை என்பது மிக முக்கியமான சான்றாகும். புகைப்பட அடையாளத்துடன் கூடிய வாக்காளர் அட்டை (Voter ID) முதன்முதலில் 1993 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா எப்படி சரிபார்ப்பது?

வழிமுறை 1: www.nvsp.in  என்ற தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலுக்கு செல்லவும்

வழிமுறை 2: போர்ட்டலின் மேல் இடது மூலையில், ‘வாக்காளர் பட்டியலில் தேடு’ (Search in electoral roll)என்ற ஆப்ஷனை காண்பீர்கள்.

வழிமுறை3: அதில் கிளிக் செய்தால் (https://electoralsearch.in/) என்ற பக்கத்திற்கு செல்லலாம்

ALSO READ | ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடும் கட்டுப்பாடு விதித்த மாநில தேர்தல் ஆணையம்

வழிமுறை 4: நீங்கள் விவரங்களை பதிவிட்டு தேடலாம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் (Electors Photo Identity Card) மூலம் தேடலைத் தேர்வு செய்யலாம்

படி 5: EPIC எண் மூலம் தேட, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் வழங்கப்பட்ட எண்ணை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்

படி 6: விவரங்களை கொண்டு தேட விரும்பினால், உங்கள் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, மாவட்டம், தந்தை அல்லது கணவரின் பெயர் போன்ற விவரங்களை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.

படி 7: தேவையான விவரங்களை பூர்த்தி செய்து captcha code  உள்ளிடவும்.

படி 8: இப்போது தேட  search பட்டனை அழுத்தவும்.

இந்த போர்ட்டலில் உங்கள் பெயர் தோன்றினால், உங்கள் பகுதியில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளது என்று அர்த்தம்.

ALSO READ | வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலையில் வாக்களிப்பது எப்படி?

வாக்காளர் பட்டியலில் பதிவு, மாற்றம், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றத்திற்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த வலைதளத்தில், நீங்கள் பூத் நிலை அதிகாரி (BLO), வாக்காளர் பட்டியல் அதிகாரி (ERO) மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் யார் என்பது போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News