மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 68 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 16, 2022, 01:05 PM IST
  • மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
  • விண்ணப்பிக்க 20ஆம் தேதி கடைசி தேதி என அறிவிப்பு

Trending Photos

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR CLRI) தற்போது Technician பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 68 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். 

காலி பணியிட விவரம்:

Junior Hindi Translator – 01
Technician – 55
Technical Assistants – 12

கல்வித் தகுதி:

Junior Hindi Translator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய  Hindi பாடப்பிரிவில் Master Degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ஆவது மற்றும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

Technical Assistants பணிக்கான விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc / Diploma கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

முன்அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள்வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

Junior Hindi Translator பணிக்கு அதிகபட்ச வயதாக 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Technician பணிக்கு அதிகபட்ச வயதாக 28 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

Junior Hindi Translator பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.61,818 ஊதியம் பெறுவார்கள்.

Technician பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாதம் ரூ. 33,875 ஊதியமாக பெறுவார்கள்.

Technical Assistants பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் மாதம் ரூ.61,818 ஊதியமாக பெறுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWD / ESM / Women விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் கட்ட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு (Paper –I & Paper –II)

இறுதி மெரிட் லிஸ்ட்

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://clri.org/Careers.aspx என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனிலேயே சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 20.06.2022என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News