அரியலூா் அனிதாவாக மாறும் பிக்பாஸ் ஜூலி! ரசிகர்கள் அதிர்ச்சி!

நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் ஜூலி நடிக்க இருக்கிறார்.

Last Updated : Mar 6, 2018, 08:46 AM IST
அரியலூா் அனிதாவாக மாறும் பிக்பாஸ் ஜூலி! ரசிகர்கள் அதிர்ச்சி! title=

நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் ஜூலி நடிக்க இருக்கிறார்.

நாடு முழுவதும் நீட் தேர்வை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் அதிக மதிப்பெண் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்நிலையில் அனிதாவின் பெயரில் படம் ஒரு உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ‘டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ்’ என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அனிதா கதாபாத்திரத்தில் ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கவுள்ளார். அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. 

 

 

 

Trending News