ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் நாள் சிறப்பு பார்வை

இன்று நாடு முழுவதும் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2019, 01:54 PM IST
ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் நாள் சிறப்பு பார்வை title=

புதுடெல்லி: 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் நாளாகக் (National Doctors' Day) கொண்டாடப்படுகிறது. பிதான் சந்திரா ராய் (Dr. Bidhan Chandra Roy) நினைவாக தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவரான பிதான் சந்திர ராய், பீகார் மாநிலத்தில் 1882 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிறந்தார். 80 ஆண்டுகள் கழித்து இதே தினத்தில் அவர் மறைந்தார். அவரின் பிறந்ததேதியும், மறைந்த தேதியும் ஒரே நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தியின் கொள்கைகளால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலிலும் தனது பணியை செய்தார். 1948 ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 1962 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி வரை 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக செயல்பட்டார். முதல்வராக செயல்பட்ட போதிலும் சரி, மருத்துவராக செயல்பட்ட போதிலும் சரி, தனது பணியை திறம்பட செய்தார். மக்களுக்கு சேவை செய்வதிலேயே தனது வாழ்நாளை பெரும்பாலும் கழித்தார். 

இவரின் சேவையை பாராட்டிய மத்திய அரசு, அவரை கவுரவிக்கும் விதமாக 1961 ஆம் ஆண்டு பிதன் சந்திரா ராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கியது.

பிதன் சந்திரா ராயின் சேவையை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜுலை 1 ஆம் தேதி "தேசிய மருத்துவர்கள் நாளாக" இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவரின் பெயரில் சிறப்பாக மருத்துவ சேவை செய்பவர்களுக்கு 1976 ஆம் ஆண்டு முதல் டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.

Trending News