ஜோதிடத்தில் நவகிரக நாயகர்களில் குரு பகவானுக்கு தனி சிறப்பு உண்டு. குரு பார்ப்பின் கோடி நன்மை என்பது ஐதீகம்.
குருவின் பார்வையால்தான் மங்களங்கள் ஏற்படும். திருமணம் நடைபெறுவதற்கும், நிம்மதியான மணவாழ்வுக்கும் அச்சாரம் இடுபவர் குரு தான்.
குருவின் கடாட்சம் இல்லை என்றால், எல்லாம் கூடி வந்தாலும் திருமணத் தடை நீடிக்கும். எனவே, திருமணம் செய்பவர்கள், ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது குரு பலன் வந்துவிட்டதா என்பதைத்தான் முதலில் பார்ப்பார்கள்.
அதனால்தான், எப்போதும் குரு பெயர்ச்சி விஷேச கவனத்தைப் பெறுகிறது. திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களும், குரு பெயர்ச்சியின் அடிப்படியில் தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தை எடுப்பதும் வழக்கம்.
இந்த ஆண்டு (2022) குரு பகவான் பிலவ ஆண்டின் கடைசி நாளான பங்குனி 30 (ஏப்ரல் 13) அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியானார்.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: 2023 வரை இந்த 3 ராசிக்கு கூரையை பிய்த்து அதிர்ஷ்டம் கொட்டும்
பொதுவாக குரு எந்த இடத்தில் அதாவது எந்த ராசியில் அமர்ந்திருக்கிறாரோ அந்த ராசிக் காரர்களைவிட, அவரின் பார்வை எந்த ராசியின் மீது விழுகிறதோ, அதன் பலன் மிகவும் கவனமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக, ஒருவரின் ராசிக்கு, 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் . குரு பகவான் அமர்ந்திருந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.
தற்போது அதிசாரமாக கும்பத்திலிருந்து மீன ராசிக்கு சென்ற குரு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பாமல், மீனத்திலேயே சஞ்சரிக்கிறார். மீன ராசியிலேயே 2023 ஏப்ரல் 30 வரை குரு பகவான் இருப்பார்.
தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குரு பகவான் அடுத்த ஓராண்டு காலத்தில் ராசிக்கு ஏற்றவாறு. அனைவருக்கும் வெவ்வேறு நன்மைகளைத் தர உள்ளார்.
குருவின் பார்வையால் பலருக்கும் பல யோகங்கள் உண்டாகும். அவற்றில் முக்கியமானவை, கஜகேசரி யோகம், குருமங்கள யோகம், குரு சந்திர யோகம், சகட யோகம், ஹம்ச யோகம் அகியவை ஆகும்.
கஜகேசரி யோகம்: சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து குரு கேந்திரத்தில் அதாவது 4, 7, 10 ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தால் கஜகேசரி யோகம் உருவாகும். இந்த யோகத்தினால், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, வீடு, வாகனம், உயர் பதவி பெற்று மதிப்பும் மரியாதையுமாக வாழலாம்.
மேலும் படிக்க | புதன் வக்ர பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம்
குருமங்கள யோகம்: குருவுடன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் அது குரு மங்கள யோகம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. குரு மங்கள யோகம் இருந்தால், வீடு, இடம் என அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் தேடி வரும்.
குரு சந்திர யோகம்: சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து 1, 5, 9 ஆகிய இடங்களில் குரு இருந்தால், குரு-சந்திர யோகம் உருவாகிறது. இந்த யோகத்தைப் பெற்றவர்கள் பிரபலமடைவார்கள், சமூகத்தில் செல்வாக்கு பெறுவார்கள்.
சகட யோகம்: குரு அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து 6, 8, 12 ஆகிய இடங்களில் சந்திரன் வீற்றிருந்தால் சகட யோகம் உருவாகும். சகடம் என்றால் சக்கரம் என்று பொருள். சகட யோகம் பெற்றவர்களின் வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும்.
ஹம்ச யோகம்: சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு உச்சம் பெற்றிருந்தால், ஹம்சயோகம் உருவாகிறது. ஹம்ச யோகம் பெற்றவர்கள் பார்ப்பதற்கு அழகானவர்களாகவும், பார்ப்பதற்கு கவர்ச்சியானவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை முறை சீரானதாக, ஒழுக்கம் நிறைந்ததாக அமையும்.
இந்த யோகங்கள் அனைத்தையும் கொடுப்பது குருவுடன் இணையும் பிற கிரகங்கள் என்பதால், குருவின் வக்ர பார்வையை பெற்றவர்கள் அதற்கான பரிகாரங்களை செய்வதோடு, தங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் பிற கிரகங்களின் சேர்க்கையையும் பார்த்து அதற்கேற்றாற் போல பரிகாரங்கள் செய்துக் கொள்வது நல்லது.
மேலும் படிக்க | இன்று தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR