சுவைமிக்க போஹா ஊத்தப்பம் செய்வது எப்படி? எளிய முறையில் கற்கலாம்!

முழு அடைப்பின் போது மக்கள் தங்கள் வீட்டில் புதிது புதிதாக உணவு வகைகளை செய்ய முற்படுகின்றனர். ஆனால் பல்சுவை உணவு வகைகளை செய்ய தேவையான பொருட்களை வாங்க வெளியில் செல்லாமால் நாம் முடங்கியுள்ளோம்.

Last Updated : May 24, 2020, 03:59 PM IST
சுவைமிக்க போஹா ஊத்தப்பம் செய்வது எப்படி? எளிய முறையில் கற்கலாம்! title=

முழு அடைப்பின் போது மக்கள் தங்கள் வீட்டில் புதிது புதிதாக உணவு வகைகளை செய்ய முற்படுகின்றனர். ஆனால் பல்சுவை உணவு வகைகளை செய்ய தேவையான பொருட்களை வாங்க வெளியில் செல்லாமால் நாம் முடங்கியுள்ளோம்.

இந்நிலையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சுவையான உணவு வகைகளை செய்வது எவ்வாறு என இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். அந்த வகையில் நாம் போஹா ஊத்தப்பம் செய்வது எவ்வாறு என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • அரை கப் போஹா
  • அரை கப் ரவை
  • அரை கப் தயிர்
  • அரை கப் தண்ணீர்
  • அரை டீஸ்பூன் உப்பு
  • தேவைக்கேற்ப எண்ணெய்
  • வெங்காயம்
  • கேப்சிகம்
  • கேரட்
  • 5 பிரஞ்சு பீன்ஸ்
  • 2 தேக்கரண்டி கொத்தமல்லி இலைகள்
  • 1/4 தேக்கரண்டி உப்பு
  • மிளகாய்

செய்முறை: போஹா ஊத்தப்பம் செய்ய, போஹாவை 5 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டி அரைத்து கூழ்மமாக தயாரிக்க வேண்டும். இப்போது அதில் ரவை, தயிர், தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து கலக்கவும். 

இதற்குப் பிறகு, இந்த மாவை கொண்டு ஒரு மினி ஊத்தப்பம் செய்து, அதில் டாப்பிங் வைக்கவும். 

ஊத்தப்பம் தயாரிக்கும் போது தவாவில் தேவைக்கேற்ப எண்ணெய் பயன்படுத்துவது ஊத்தப்பத்தினை பொன்னிறமாக மாற்றவும் சுவை மிக்கதாக மாற்றவும் உதவுகிறது. சுவையான ஊத்தப்பம் தயாரான பிறகு இதனை சிறிதுஅளவு சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

Trending News