அக்டோபர் மாதம் எந்தெந்த ராசிகளுக்கு காதல் செட் ஆகும்..? இதோ காதல் ராசி பலன்கள்..!

Love Horoscope Ocotober 2023: அக்டோபர் மாதம் எந்தெந்த ராசிகளுக்கு காதல் மலர உள்ளது? இங்கே தெரிந்து கொள்வோம் வாங்க. 

Written by - Yuvashree | Last Updated : Sep 30, 2023, 06:36 PM IST
  • இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி உள்ளது?
  • மேஷம், ரிஷபம் உள்ளிட்ட ராசிகளுக்கு காதல் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படும்.
  • பிற ராசிக்கு என்ன பலன் உள்ளது? இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அக்டோபர் மாதம் எந்தெந்த ராசிகளுக்கு காதல் செட் ஆகும்..? இதோ காதல் ராசி பலன்கள்..! title=

12 ராசிகளுக்கும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை அமையும். ஜோதிடத்தையும் நம் மனதையும் நம்பி முடிவெடுப்பது சிறந்தது என பெரியவர்கள் கூறுவதுண்டு.  அக்டோபர் மாதம் வரப்போகிறது. இந்த மாதத்தில் எந்தெந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு எந்த மாதிரியான காதல் வாழ்க்கை அமையும்? இங்கே பார்ப்போம். 

1.மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பல புதுமையான விஷயங்களை வைத்துள்ளது. காதல் விஷயத்தில் புதுமையான பல அனுபவங்கள் கிடைக்க உள்ளது. சிங்கிளாக இருக்கும் மேஷ ராசியை சேர்ந்தவர்கள் தங்கள் மீது ஆசை இருப்பவர்களை ஈர்க்க உள்ளனர். ஏற்கனவே காதலில் இருப்பவர்கள், அந்த உறவில் இருக்கும் மரியாதையை சமநிலையாக வைத்துக்கொள்ள வேண்டும். சில மேஷ ராசிக்காரர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த்வர்கள் தானாக வந்து பேசுவார்கள். 

2.ரிஷபம்:

ரிஷப ராசி உடையோர், காதல் உறவில் இருந்தாலும் கொஞ்சம் தனியாக நேரம் செலவிட வேண்டிய தருணங்கள் வரலாம். சிங்கிளாக இருப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன் இருப்பவர்களால் ஈர்க்கப்படுவர். உங்களுடைய தனித்துவத்தை பாராட்டும் மனிதர்களுடன் பழகுவது நல்லது. 

3.மிதுனம்:

இந்த மாதம் மிதுன ராசிக்காரர்கள், வெளியில் காதலை தேடுவதை விட உள்ளிருந்தே காதலை தேடிக்கொள்வர். காதல் உறவில் இருப்பவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும். சிங்கிளாக இருப்பவர்களுக்கு தங்களை தாங்களே பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு இந்த மாதத்தில் கிடைக்கும். அடுத்த உறவிற்காக நீங்கள் ஆயத்தமாகும் வாய்ப்பும் இந்த மாதத்தில் கிடைக்கும். உங்கள் உணர்வுகளையும் உங்களது விருப்பங்களையும் மதிக்க கற்றுக்கொள்வீர்கள். 

மேலும் படிக்க | பார்த்தவுடனே காதல் வசப்படும் இந்த ராசி உங்களுடயதா? அப்ப இந்த விஷயம் தெரியுமா?

4.கடகம்:

ஆன்மீக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் காதல் உறவில் உங்களுக்கு ஒரு புரிதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இருக்கும் காதல் உறவிற்கு புதிய பெயரும் கிடைக்கலாம். சிங்கிளாக இருபப்வர்கள் தன்னை புரிந்து கொள்பவர்கள் வந்தால் அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். 

5.சிம்மம்:

இந்த அக்டோபர் மாதம், சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் தங்களது காதலில் புதுப்புது சாகசங்களை புரிவர். சிங்கிளாக இருப்பவர்கள் வெவ்வேறு வகை பின்னணியில் இருந்து வருபவர்களால் ஈர்க்கப்படுவர். புது கதவு ஒன்று திறக்க நேரிட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

6.கன்னி:

இந்த மாதம் கன்னி ராசியை சேர்ந்தவர்கள் பல வகையான காதல் உணர்வுகளை அனுபவிக்க உள்ளனர். ஏற்கனவே உறவில் இருப்பவர்களின் காதல் இன்னும் தீவிரமடையும். உங்களது பார்ட்னருடன் அதிகம் பேச முயற்சி செய்யவும். சிங்கிளாக இருப்பவர்கள், பலருடன் பேச பழகி கொள்வர். 

7. துலாம்:

இந்த மாதம் துலாம் ராசிக்காரர்களின் காதல் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். தவறான புரிதல்களால் சண்டைகள் ஏற்படலாம். இதை தவிர்க்க, தீர பேசிக்கொள்வது முக்கியம். சிங்கிளாக இருப்பவர்கள் புதிதாக ஒரு உறவில் காலடி எடுத்து வைக்கும் முன்னர் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. 

8. விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, அவர்கள் காதல் வாழ்வில் ஒரு தீர்வு கிடைக்கும். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்கள், ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்வர். சிங்கிளாக இருப்பவர்கள், காதல் உறவை எதிர்பார்ப்பவர்களால் ஈர்க்கப்படுவர். இவர்கள், நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலும், நிலைத்தன்மையை ஏற்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். 

9.தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் தனது காதல் வாழ்க்கையையும் அழகாக பேலன்ஸ் செய்வர். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்கள், உணர்வு ரீதியாக பெரிதாக இணைவர். சிங்கிளாக இருப்பவர்கள், தனக்கு பிடித்த விஷயங்களை பிடிக்கும் ஒருவரை சந்திக்க நேரிடும். 

10.மகரம்:

மகர ராசிக்காரர்கள், நிலையான மரியாதை மற்றும் காதல் கொடுக்கும் உறவில் இருப்பர். தான் உயர வேண்டும் என்று எண்ணுவது மட்டுமன்றி அவர்கள் உயரத்தை அடையவும் துணை நிற்பர். சிங்கிளாக இருபப்வர்கள், தனக்கு மரியாதை கொடுக்கும், அறிவார்ந்தவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இதனால், உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் உருவாகலாம். 

11.கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அவர்களின் காதல் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சிலர், தங்களுக்குள்ளேயே பல மாற்றங்களை உணர்வர். சிங்கிளாக இருப்பவர்கள் தனக்கு நேர்மறையாக சிந்திப்பவர்களை சந்திக்க நேரிடும். தெளிவாக பேசிவிட்டு, அடுத்த அடியை எடுத்து வைப்பது நன்று. 

12.மீனம்: 

மீன ராசிக்காரர்களுக்கு அவர்களின் காதல் உறவு நிலைக்கும் என்ற நம்பிக்கை வரும். காதல் உறவு மேம்பட்டு பெரிய அளவில் வளரலாம். இந்த மாதம் உங்களது காதல் வாழ்வில் நம்பிக்கை வளரும், உங்களது எண்ணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வீர்கள். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று விரும்புபவர்களை பார்த்து சிங்கிளாக இருக்கும் மீன ராசிக்காரர்கள் ஈர்க்கப்படுவர்.

மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு பொறுப்பே இருக்காது..! யார் அவர்கள்..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News