மகாளய அமாவாசை: திதி கொடுப்பதால் என்னென்ன பலன்கள்

தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது என்று அர்த்தம். நீரை அளித்து அவர்களை திருப்தி செய்து அருளைப் பெறுதல்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2021, 09:04 AM IST
மகாளய அமாவாசை: திதி கொடுப்பதால் என்னென்ன பலன்கள் title=

பித்ரு பட்சம் 16 சந்திர நாட்கள் கொண்ட பட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் (பித்துருக்கள்) காலமாகக் கருதப்படுகிறது. இந்நாட்களில் இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபடுகிறார்கள். இச்சடங்கு மகாளய பட்சம் என்றும் வழங்கப்படுகிறது.

புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை (Mahalaya Amavasya) ஆகும். இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பிருந்தே மகாளய பட்ச காலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் பித்ரு லோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுப்பது  வழக்கம். இந்த ஆண்டு மகாளய அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது.

ALSO READ | மகாளய அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க செய்ய வேண்டியது என்ன..!!!

இறந்து போன நம் முன்னோர்களுக்கு நாம் ஆற்றவேண்டிய சில கடமைகள் உள்ளன. இறந்தபின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது அவசியம். புரட்டாசி மாதம் எமனின் கோரைப்பற்கள் வெளியே தெரியும் மாதமாக இருப்பதால் புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். 

இந்த நாளில் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி, தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர் என அனைவருக்குமாக தர்ப்பணம் செய்யலாம். இந்த நாளில் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி, தாய் வழித் தாத்தா பாட்டி என மூன்று தலைமுறையினர் என அனைவருக்குமாக இந்தக் காலங்களில் தர்ப்பணம் செய்யலாம்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பல கோவில்களிலும், முக்கிய நதிக்கரைகள், கடற்கரைகளில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாம் வீடுகளிலேயே திதி கொடுக்கலாம்.

முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். புரட்டாசி அமாவாசை நாளில் நாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து தானம் கொடுப்பதன் மூலம் சுபகாரியத் தடைகள் நீங்கும் தீராத நோய் தீரும்.

ALSO READ | அன்னை மகாலட்சுமியின் அருளுடன் வீட்டில் என்றென்றும் செல்வம் செழிக்க வேண்டுமா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News