துலாம் ராசியில் புதன்; விடியலை சந்திக்கப் போகும் '4' அதிர்ஷ்ட ராசிகள்!

புதன் பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 19, 2022, 01:30 PM IST
  • புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் சிலரது வாழ்வில் மிகவும் சுபமான விளைவை ஏற்படுத்தும்.
  • பெயர்ச்சி காலத்தில் பல வகைகளில் இருந்து பண வரவு ஏற்படும்.
  • காதல் உறவுகளில் துணையுடன் நெருக்கம் அதிகரித்து மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
துலாம் ராசியில் புதன்; விடியலை சந்திக்கப் போகும் '4' அதிர்ஷ்ட ராசிகள்! title=

புதன் பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வணிகம் மற்றும் தொடர்புத் திறன் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது. புதன் கிரகம் செப்டம்பர் 10 முதல் வக்ர நிலையை அடைந்த நிலையில், அக்டோபர் 26 ஆம் தேதி, புதன் கிரகம் துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சில ராசிக்காரர்கள் தொழில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள்.

அறிவு கூர்மை, புத்திசாலித்தனம், வியாபாரம், செல்வம் போன்றவற்றின் காரணியான புதனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் சிலரது வாழ்வில் மிகவும் சுபமான விளைவை ஏற்படுத்தும். புதன் பெயர்ச்சி பலன்கள் அனைத்து ராசிக்காரர்களின் வேலை - வியாபாரம், கல்வி, அறிவுத் திறன், நிதி நிலை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிக்காரர்கள் தொழில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை, புதன் பெயர்ச்சி யாருக்கு மகத்தான வெற்றியைத் தரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மகரம்

புதனின் சஞ்சாரம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப் போகிறது. அவர்களில் மகர ராசிக்காரர்களும் அடங்குவர். பெயர்ச்சி காலத்தில் பல வகைகளில் இருந்து பண வரவு ஏற்படும். தீடீர் பண வரவும் மகிழ்ச்சியை கூட்டும். இதுமட்டுமின்றி அலுவலக வேலை காரணமாக பயணம் செய்ய நேரிடலாம். இந்தப் பயணம் சாதகமாக அமையும். எதிர்காலத்தில் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் உறவு மேம்படும்.

தனுசு

ஜோதிட சாஸ்திரத்தின்படி, துலாம் ராசியில் புதன் நுழைவது இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக பலனளிக்கும். இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். அதே நேரத்தில், வேலையில் உள்ளவர்களுக்கு பணியில் பாராட்டுக்களும் அங்கீகாரமும் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் முதலீட்டிலிருந்து லாபம் கிடைக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன. காதல் உறவுகளில் துணையுடன் நெருக்கம் அதிகரித்து மகிழ்ச்சியைக் கொடுக்கும். அரசியல் துறையுடன் தொடர்புடைய மக்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் காணலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | புதன் - சுக்கிரன் இணைவதால் தீபாவளி முதல் பண மழையில் நனையும் ‘3’ ராசிகள்!

கும்பம்

புதன் கிரகம் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் போது இந்த ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்கள் தொடங்கும். இது இவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தொழில் துறையில் புதிய உயரங்களை தொடுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போவதால் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பல புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கன்னி

தீபாவளிக்கு பிறகு புதன் பெயர்ச்சி பலன் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் தெளிவாக தெரியும். இந்த ராசியின் இரண்டாம் வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இந்த நேரத்தில், எதிர்பாராத வகையில் பணம் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். தாயாருடன் உறவில் முன்னேற்றம் ஏற்படும். வணிகர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தொழிலதிபர்களுக்கு இந்தப் பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் கடனாக கொடுத்து சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். பேச்சுத்திறன் மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சிறந்தது.

மேலும் படிக்க | Astro Traits : பேச்சுத்திறனால் காரியத்தை சாதித்துக் கொள்ளும் ‘5’ ராசிகள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News