மேற்குத் தொடர்ச்சி மலை: விஜய் சேதுபதியின் புதிய வீடியோ!!

மேற்குத் தொடர்ச்சி மலை படம் குறித்து ஒரு புரோமோஷன் வீடியோவை நடிகை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 5, 2018, 11:14 AM IST
மேற்குத் தொடர்ச்சி மலை: விஜய் சேதுபதியின் புதிய வீடியோ!! title=

மேற்குத் தொடர்ச்சி மலை படம் குறித்து ஒரு புரோமோஷன் வீடியோவை நடிகை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலை என்ற படம் உருவாக்கியுள்ளார். இப்படத்தில் தேனி அந்தோணி ராஜ் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் காயத்ரி கிருஷ்ணா, அபு வலையன்குளம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இப்படம் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இயக்குனர் லெனின் பாரதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் விஜய் சேதுபதி, இப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில், இது எளிய மக்களுக்கான படம். ஒரு அழகான வாழ்க்கை மூலமா, வாழ்வியல் மூலமா படம் சொல்லப்பட்டிருக்கிறது. படம் ரொம்ப அழகா வந்துருக்கு. என்ன பொறுத்தவரை இந்த மாதிரி ஒரு படம் பண்ணுனதுல ஆத்ம திருப்தியோட இருக்கேன். மன நிறைவோட இருக்கேன். அதுக்கு லெனினுக்கு தான் நன்றி சொல்லனும். இந்தப் படத்தோட கதையை கேட்டு பணிபுரிய முன்வந்த இசைஞானி இளையராவுக்கும் நன்றி. நான் ஒரு நல்லப் படம் எடுத்திருக்கேனு நம்புறேன். எல்லோரும் திரைக்கு வந்து இப்படத்தை பாக்கணும்.

என்று கூறியுள்ளார்.

Trending News