ராணுவ வீரர்கள் இனி ஃபார்ச்சுனர், சஃபாரி கார்களை CSD கேண்டினில் வாங்க முடியாது!!

ராணுவ வீரர்கள் இனி கேண்டினில் ஃபார்ச்சுனர், இன்னோவா, ஸ்கார்பியோ போன்ற கார்களை வாங்க இயலாது என்று மத்திய அரசு புதிய கோட்பாடுகளை விதித்துள்ளது.

Last Updated : Jun 10, 2019, 01:10 PM IST
ராணுவ வீரர்கள் இனி ஃபார்ச்சுனர், சஃபாரி கார்களை CSD கேண்டினில் வாங்க முடியாது!! title=

ராணுவ வீரர்கள் இனி கேண்டினில் ஃபார்ச்சுனர், இன்னோவா, ஸ்கார்பியோ போன்ற கார்களை வாங்க இயலாது என்று மத்திய அரசு புதிய கோட்பாடுகளை விதித்துள்ளது.

இந்திய ராணுவத்தில் வேலை பார்ப்பவர்களுக்காக மிலிட்டரி கேண்டீகள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கேண்டீனிலிருந்து ராணுவத்தில் வேலை செய்யும் குடும்பங்கள் மளிகை பொருள்கள், பைக், கார் போன்ற பொருள்களை குறைந்த விலையில் வாங்கி பயன்பெற்று வந்தனர். அத்துடன் ஜிஎஸ்டி மற்றும் பிற வரி சலுகைகள் இங்கு வாங்கும் பொருள்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் தற்போது மிலிட்டரி கேண்டீன்களிலிருந்து கார்கள் வாங்குவதற்கு மத்திய அரசு புதிய கோட்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இனி மிலிட்டரி கேண்டீன்களிலிருந்து, ராணுவத்தில் சம்பள அளவுகோல் 10 முதல் 18 வரை இருக்கும் வீரர்கள், இந்த மாதம் முதல் ரூ, 12 லட்சம் மதிப்பிலான 2500 சிசி வரையிலான கார்களை மட்டுமே வாங்க முடியும். இதேபோல  ராணுவத்தில் சம்பள அளவுகோல் 3ஏ முதல் 9 வரை இருப்பவர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான 1,400 சிசி வரையிலான கார்களை வாங்க முடியும்

இதேபோல  ராணுவத்தில் சம்பள அளவுகோல் 3ஏ முதல் 9 வரை இருப்பவர்கள் ரூ.5 லட்சம் மதிப்பிலான 1,400 சிசி வரையிலான கார்களை வாங்க முடியும். இந்த கார்களை வாங்குவதற்கான காலக்கெடுவையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் ராணுவ வீரர் பணியில் இருக்கும் போது ஒரு காரும், ஒய்வு பெரும் போது ஒரு காரும் வாங்க முடியும். மேலும் ஒரு கார் வாங்கி 8 வருடம் கழித்தே மற்றொரு கார் வாங்க வேண்டும். ராணுவ வீரர்கள் இனி கேண்டினில் ஃபார்ச்சுனர், இன்னோவா, ஸ்கார்பியோ போன்ற கார்களை வாங்க இயலாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

 

Trending News