Bizarre Luck: தலைவிதியை புரட்டிப் போட்ட தவறு! தப்புக்கு வெகுமதி அஞ்சரை கோடி ரூபாய்! அதிர்ஷ்டசாலி மனிதர்!

தவறே செய்யக்கூடாது என்று கண்டிப்பது சரிதான். ஆனால், ஒரு மனிதர் செய்த‘தவறு’ அவரது தலைவிதியை புரட்டிப் போட்டு, ஒரே இரவில் ஐந்தரை கோடிக்கு சொந்தக்காரராக்கிய அதிர்ஷ்ட தப்பு இது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 8, 2021, 02:09 PM IST
  • தப்புக்காக வருந்தியவருக்கு அதிர்ஷ்டம்
  • ஒன்றுக்கு இரண்டாக லாட்டரி வாங்கியதால் வருத்தம்
  • இரண்டு லாட்டரிகளுக்கும் பரிசு
Bizarre Luck: தலைவிதியை புரட்டிப் போட்ட தவறு! தப்புக்கு வெகுமதி அஞ்சரை கோடி ரூபாய்! அதிர்ஷ்டசாலி மனிதர்! title=

தவறே செய்யக்கூடாது என்று கண்டிப்பது சரிதான். ஆனால், ஒரு மனிதர் செய்த‘தவறு’ அவரது தலைவிதியை புரட்டிப் போட்டு, ஒரே இரவில் ஐந்தரை கோடிக்கு சொந்தக்காரராக்கிய அதிர்ஷ்ட தப்பு இது. 

ஒருவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால், என்ன நடந்தாலும் சரி வாழ்க்கையில் வெற்றி பெறுவார் என்பது பல முறை நாம் பார்த்த விஷயமாக இருக்கலாம். அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவருக்கும் அப்படித்தான் நடந்தது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வசிக்கும் ஸ்காட்டி தாமஸ், ஒரே இரவில் ஐந்தரை மில்லியன் தொகைக்கு உரிமையாளர் ஆனார்.  

தவறுதலாக வாங்கிய லாட்டரி சீட்டு
தாமஸ் தற்செயலாக இரண்டு லாட்டரி டிக்கெட்டுகளை (Lottery Ticket) வாங்கிவிட்டு, தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தார். இந்த தவறுக்காக மிகவும் வருந்தினார். இனிமேல் இப்படி தப்பு செய்யமாட்டேன் என்று உறுதியும் எடுத்தாராம்!

ALSO READ | எப்போதும் விவாகரத்துக்கு ரெடி! இது பாகிஸ்தான் பெண்களின் தனிவிருப்பம்

ஆனால் லாட்டரி முடிவு வெளியானதும் ஆச்சரியம் தான் ஏற்பட்டது.  வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளிலும் சேர்த்து சுமார் ஐந்தரை கோடி ரூபாயை வென்று ஒரே இரவில் கோடீஸ்வரரானார். 

CNN அறிக்கையின்படி, ஸ்காட்டி தாமஸ் தவறுதலாக இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்கினார்.  ஒரு நாள் வீட்டில் வீட்டில் பொழுதுபோகாமல் அமர்ந்திருந்த தாமஸ், பொழுதுபோக்குக்காக லாட்டரி டிக்கெட் வாங்க நினைத்தார். 

தவறுதலாக இரண்டு டிக்கெட்டுகளை வாங்கியதற்காக வருந்தினேன்
டைம் பாஸுக்காக வீட்டில் அமர்ந்து 'லாட்டரி ஃபார் லைஃப்' (Lottery for Life) டிக்கெட்டை வாங்க முடிவு செய்ததாக ஸ்காட்டி கூறினார். இதையடுத்து லாட்டரிக்கான விவரங்களை ஆன்லைனில் நிரப்பத் தொடங்கினார். இதற்கு முன் ஆன்லைனில் லாட்டரி டிக்கெட் வாங்கியதில்லை என்று சொல்லும் அவர், தற்செயலாக இரண்டு முறை விவரங்களை உள்ளிட்டிருக்கிறார்.

ALSO READ | செக்ஸ் பொம்மையை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பாடிபில்டர்!

ஒரே ஒரு டிக்கட் வாங்குவதற்காகத் தான் ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் மறுநாள் காலையில் மகன்கள் சொன்னபோதுதான், இரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கியது தெரியவந்ததாக தாமஸ் சொல்கிறார். தான் தவறு செய்துவிட்ட வருத்தத்தில் இருந்ததாகவும், அதோடு எதற்காக இரண்டு டிக்கெட் வாங்கினீர்கள் என்று மகன்கள் கடிந்து கொண்டதும் வருத்தத்தைத் தந்ததாக சொல்லும் தாமஸ், தப்பு செய்துவிட்டோம் என்று மிகவும் வருந்தியிருக்கிறார்.

அதிர்ஷ்டமாக மாறிய தவறு
ஸ்காட்டி தாமஸ் செய்த இந்த தவறு அவரது அதிர்ஷ்டத் தப்பு என்பது அப்போது தெரியவில்லை. அவ்வப்போது, தனது தவறுக்காக வருந்திக் கொண்டிருந்த ஸ்காட்டி தாமஸ், சில நாட்களுக்குப் பிறகு, இரண்டு லாட்டரிகளுக்கும் பரிசு கிடைத்திருப்பது தெரிந்ததும் ஸ்காட்டியால் நம்பவே முடியவில்லை. 

அதிலும் இரண்டு லாட்டரிகளுக்கும் சேர்ந்து கிடைத்த தொகை ஐந்தரை கோடி ரூபாய் என்று தெரிந்ததும், எதுவும் பேசத் தோன்றாமல், சிறிது நேரம் தரையில் படுத்துவிட்டாராம்! யாருடைய நிலைமை எப்போது மாறும், எது சரி? எது தவறு? என்பது யாருக்கும் தெரியாது என்று சொல்லும் ஸ்காட்டி தாமஸ் அதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார்.

 

READ ALSO | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News