ரயில் டிக்கெட் வாங்குவதில் வந்த புது ரூல்ஸ்..! லைனில் இனி நிற்காதீர்கள்

பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட் வசதியை  எளிதான வழங்குவதற்காக மொபைல் செயலி UTS -ல் ரயில்வே முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இதனால், பயணிகள் எந்த இடத்திலிருந்தும் பொது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 2, 2024, 06:27 AM IST
  • ஐஆர்சிடிசியில் புதிய விதிமுறைகள்
  • ரயில் டிக்கெட் புக் செய்வதில் புதிய மாற்றம்
  • இனி பயணிகளுக்கு லிமிட் இல்லை
ரயில் டிக்கெட் வாங்குவதில் வந்த புது ரூல்ஸ்..! லைனில் இனி நிற்காதீர்கள் title=

ரயில்வே பொதுப் பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு இது ஒரு குட்நியூஸ். இப்போது ஜெனரல் கோச் டிக்கெட்டை வாங்க ஸ்டேஷனில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. பொதுப் பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு டிக்கெட் வசதியை எளிதாக வழங்குவதற்காக மொபைல் செயலியில் UTS -ல் ரயில்வே முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இதனால், இப்போது பயணிகள் எந்த இடத்திலிருந்தும் பொது ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

UTS மொபைல் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான தூர வரம்பு (Distance Limit) இப்போது நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரிவின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இப்போது பயணிகள் எங்கிருந்தும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்னதாக, யுடிஎஸ் மொபைல் செயலி மூலம் பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான அதிகபட்ச தூர வரம்பு 20 கி.மீ.  இருந்தது. இப்போது அந்த லிமிட் எல்லாம் இல்லை. 

ரயில்வே துறையின் இந்த நடவடிக்கை, நீண்ட வரிசையில் நிற்கும்போது பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைப்பதோடு, காகித சேமிப்புக்கும் வழிகோலும். மொபைல் செயலியில் பயணிகள் யுடிஎஸ் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ரயில்வே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுடன் பயணிக்கும் பயணிகள், மொபைல் டிக்கட் செயலியில் யுடிஎஸ் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் படிக்க | SIP: பரஸ்பர நிதியத்தில் முதலீடு... ‘இந்த’ தவறுகளை செய்யாதீங்க..!!

UTS ஆப் மூலம் பொது டிக்கெட்டுகளை (General Tickets) எப்படி முன்பதிவு செய்வது? என்பதை பார்க்கலாம் :

UTS செயலியில் இருந்து பொது டிக்கெட்டை எவ்வாறு பதிவு செய்வது?

1: ஆன்லைனில் பொது ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய, முதலில் உங்கள் மொபைலில் UTS செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2: இப்போது இதற்குப் பிறகு, செயலியில் உங்கள் பெயர், மொபைல் எண், அடையாள அட்டை தொடர்பான தகவல்களைப் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.

3: UTS செயலியில் பதிவு செய்யும் போது, உங்கள் மொபைல் எண்ணில் OTP கிடைக்கும். இந்த OTT ஐ பூர்த்தி செய்தால், உங்கள் செயலியில் பதிவு செய்ய முடியும்.

4: இப்போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வரும். இதன் மூலம் நீங்கள் UTS செயலியில் லாகின் செய்ய முடியும்.

5: இப்போது டிக்கெட்டை முன்பதிவு செய்ய, விவரங்களை உள்ளிட வேண்டும், நீங்கள் எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.

6: இப்போது நெக்ஸ்ட் மற்றும் கெட் ஃபேர் என்பதைக் கிளிக் செய்து புக் டிக்கெட் பட்டனை அழுத்தவும். R-Wallet/UPI/Net Banking/Card உள்ளிட்ட பல கட்டண முறைகளைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

7: இப்போது டிக்கெட் செயலியில் தெரியும். நீங்கள் விரும்பினால், நீங்கள் டிக்கெட்டை பிரிண்ட் செய்து கொள்ளலாம் அல்லது பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான பம்பர் திட்டம்: ஜாக்பாட் வட்டி, அசத்தலான வருமானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News