இமைக்கா நொடிகள்: 27 டிரைலர்! இன்று போட்டோ ஸ்டில்ஸ் வைரல்

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் `இமைக்கா நொடிகள்'.

Last Updated : Jun 25, 2018, 04:50 PM IST
இமைக்கா நொடிகள்: 27 டிரைலர்! இன்று போட்டோ ஸ்டில்ஸ் வைரல்

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் `இமைக்கா நொடிகள்'.

இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். மேலும் அதர்வா அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களை தவிர பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 

அத்துடன் இப்படத்தில் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். 

ஏற்கனவே படத்தில் இருந்து `காதலிக்காதே', `விளம்பர இடைவெளி' என்று இரண்டு பாடல்கள் வெளியானது. தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 27-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. அதேநாளில் காலை 10 மணியளவில் படத்தின் டிரைலரும் ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்தின் சில போட்டோ ஸ்டில்ஸ் டிவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

More Stories

Trending News