சருமத்திற்கு மட்டுமில்லை! தலைமுடிக்கும் அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு தேவை!

பொதுவாக வெளியில் செல்லும் போது சருமத்திற்கு சன்ஸ்கிரீன்கள் போடுவோம். ஆனால் அதிகமான வெப்பம் தலைமுடியையும் பாதிக்கும். உங்கள் முடிக்கும் பாதுகாப்பு தேவை.   

Written by - RK Spark | Last Updated : May 30, 2024, 06:17 AM IST
  • உங்கள் சருமத்திற்கு மட்டும் சன்ஸ்க்ரீன் போதாது.
  • உங்கள் தலைமுடிக்கும் பாதுகாப்பு தேவை.
  • அதிக வெப்பம் முடிக்கு ஆபத்து.
சருமத்திற்கு மட்டுமில்லை! தலைமுடிக்கும் அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு தேவை! title=

பல காலமாக வெயிலில் இருந்தும், தூசுகளில் இருந்தும் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. தோல் பராமரிப்பு பற்றி அறிந்தவர்கள் இதனை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். சன்ஸ்கிரீன்கள் சூரியனில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிராக போராடுகிறது. மேலும், முதுமை தோற்றம், தோலின் நிறமி ஆகியவற்றை பாதுகாக்கிறது. தற்போது இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இது போன்ற சமயங்களில் சன்ஸ்கிரீன் தேவை முக்கியமானது. இந்நிலையில், உங்கள் சருமத்திற்கும் மட்டும் இல்லாமல் உங்கள் தலைமுடிக்கு சூரியனில் இருந்து பாதுகாப்பு தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் இதனை செய்ய தவறினால் முடி பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | அதிக கலோரிகளை எரிக்கும் ‘பவர் வாக்கிங்’... 5 நிமிட நடைபயிற்சியே போதும்..!!

சூரியனில் இருந்து வரும் UVB கதிர்வீச்சு முடியில் புரத இழப்பை ஏற்படுத்துகிறது, இந்த UVA கதிர்வீச்சு உங்கள் முடியின் நிறத்தை மங்கச் செய்யும். எனவே தலை முடிக்கு சூரிய பாதுகாப்பு முக்கியமான ஒன்று. குறிப்பாக கோடை காலத்தில் இந்த தாக்கம் அதிகளவில் இருக்கும். நம் சருமத்தை போலவே தலைமுடிக்கும் பாதுகாப்பு அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நீண்ட நேரம் சூரிய ஒளி நேரடியாக முடியில் படும் பட்சத்தில் இயற்கையான எண்ணெய்கள் அகற்றப்படுகின்றன. இதன் காரணமாக முடியில் உள்ள ஈரப்பதம் குறைந்து தளர்வான மற்றும் முடி கொட்டுதலுக்கு வழிவகுக்கும். இவை முடியை பலவீனமடைய செய்கின்றன. அடிக்கடி வெயிலில் முடிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சுற்றினால் உலர்ந்த முடி, முடி கொட்டுதல், பிளவு முனைகள், நிறம் மங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

சூரிய ஒளியில் இருந்து தலைமுடியை எப்படி பாதுகாப்பது? 

சூரிய ஒளியில் இருந்து முடியை பாதுகாக்க சில அடிப்படையான விஷயங்களில் ஒன்று தொப்பி அல்லது துணியை வைத்து நேரடி தாக்கத்தில் இருந்து தடுக்கலாம். எனவே வீட்டை விட்டு வெளியேறும் போது இதனை பயன்படுத்த மறக்காதீர்கள். இது முடி மற்றும் உச்சந்தலையில் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. அதே போல காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. அதிகாலை வெயில் முடிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது. முடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள கண்டிஷனர்களை தொடர்ந்து பயன்படுத்த முடி நிபுணர்கள் மிகவும் பரிந்துரைக்கின்றனர். நல்ல கண்டிஷனர்கள் முடியின் நீரேற்றம் மற்றும் மீள்தன்மையை பராமரிக்க உதவுகிறது.

முடிக்கு பாதுகாப்பு

தோல் பாதுகாப்பிற்கு சன்ஸ்கிரீனைப் போல, புற ஊதா கதிர்வீச்சிலிருந்து முடியைப் பாதுகாக்க சில தயாரிப்புகள் உள்ளன. முடியை பாதுகாக்க ஸ்ப்ரேக்கள் முதல் சீரம்கள் வரை பல பொருட்கள் உள்ளன. அவை உங்கள் முடிக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. சூரிய ஒளியில் இருந்து முடிக்கு பாதுகாப்பு அளிக்க UVA மற்றும் UVB கதிர்களுக்கு எதிராக போராடும் வைட்டமின் சி, ஈ கொண்ட சீரம்களைப் பயன்படுத்துவது நல்லது. மேலும் இந்த கிரீம்களை விட சில வீட்டு வைத்தியங்கள் மூலம் முடியை பாதுகாக்க முடியும். தயிர் முடி மாஸ்க், அலோ வேரா மாஸ்க், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க Diabetes Control: சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும் சில ‘மேஜிக்’ மசாலாக்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News