SBI பிளாட்டினம் டெபாஸிட் திட்டத்தில் கூடுதல் வட்டி; இன்றே இத்திட்டத்தில் இணையுங்கள்

SBI அறிமுகப்படுத்தும் புதிய எஸ்பிஐ பிளாட்டினம் வைப்புத் திட்டத்தில், ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14, 2021 வரை சேரலாம்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 17, 2021, 01:10 PM IST
SBI பிளாட்டினம் டெபாஸிட் திட்டத்தில் கூடுதல் வட்டி; இன்றே இத்திட்டத்தில் இணையுங்கள் title=

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பிளாட்டினம் வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டத்தில் எஸ்பிஐ கிளை அல்லது எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் இணையலாம்.

இந்த செய்தியை எஸ்பிஐ ட்விட்டரில் அறிவித்தது, தனது ட்வீட் செய்தியில், "இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், பிளாட்டினம் திட்ட முதலீட்டில் முதலீடு செய்து, சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டிய நேரம் இது. எஸ்பிஐ  அறிமுகப்பட்டுத்தும் இந்த சிறந்த டெர்ம் டெபாஸிட் 14 செப்டம்பர் 2021 வரை இணைந்து சலுகைகளை பெற்று பயனடையலாம்." எனக் கூறியுள்ளது.

SBI அறிமுகப்படுத்தும் புதிய எஸ்பிஐ பிளாட்டினம் வைப்புத் திட்டத்தில், ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14, 2021 வரை சேரலாம். மேலும் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்க  பல ஆப்ஷன்களும் உள்ளது.

ALSO READ | SBI Loans: குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? இதோ உங்களுக்காக…

பின்வரும் டெர்ம் டெபாஸிட் (Term Deposit) திட்டங்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்:

பிளாட்டினம் 75 நாட்கள்
பிளாட்டினம் 525 நாட்கள் (75 வாரம்)
பிளாட்டினம் 2250 நாட்கள் (75 மாதம்)

இதில் 0.15 வட்டி கூடுதலாக கிடைக்கும்.

இத்திட்டத்தில், முதியவர்கள் மட்டுமல்லாது தனி நபர்களும் இணைந்து பயன் பெறலாம். 

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள செய்தியில், 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனிநபர்கள் 75 நாள், 75 வாரம் (525 நாட்கள்), 75 மாதம் (2250 நாட்கள்) வரையிலான டெர்ம் டெபாசிட்களுக்கு 0.15 சதவீதம் கூடுதல் வட்டி பெறலாம். இதன் கீழ் 75 நாள், 525 நாள், 2,250 நாள் என தங்களுக்கு ஏற்ற வகையில் முதலீட்டிற்கான கால வரம்புகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ | இந்தியன் வங்கி வாடிக்கையாளரா? நீங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின் உங்கள் செக் புக் செல்லாது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News