வெளியானது பெரியார் பல்கலை., தேர்வு முடிவுகள்!

பெரியார் பல்கலைக்கழகத்தில் பயின்று, நடப்பாண்டில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களது தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மற்றும் குறுந்தகவல் மூலமாக வெளியிடப்பட்டது!

Last Updated : Jan 1, 2018, 12:37 PM IST
வெளியானது பெரியார் பல்கலை., தேர்வு முடிவுகள்! title=

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் பயின்று, நடப்பாண்டில் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களது தேர்வு முடிவுகள் இன்று இணையதளம் மற்றும் குறுந்தகவல் மூலமாக வெளியிடப்பட்டது!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற, 82 கல்லூரிகளில் மொத்தம், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இம்மாணவர்கள் நடப்பாண்டில் எழுதிய தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு முடிவுகளை http://onlinetn.com/puresults.aspx என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

தங்களை மதிப்பெண்களில் மறுகூட்டல் பெற மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெற்று, முதல்வர் வாயிலாகத் தேர்வாணையர் அலுவலகத்திற்கு, தேர்வு முடிவுகளை வெளியான 10 நாட்களுக்குள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். 

விடைத்தாள் நகலினைப் பெற்ற பின்னர் தேவைப்பட்டால் மறுமதிப்பீட்டிற்கு, எழு நாட்களுக்குள் விண்ணப்பிக்களாம் என பல்கலை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது!

Trending News