PM Awas Yojana benefits Tamil : நகர்புறங்களில் இப்போது வீடு கட்டுவது என்பது மிகப்பெரிய பொருளாதார சுமையாக இருக்கிறது. பொருளாதார நலிவடைந்த பிரிவினர் எல்லாம், செலவுகளை பார்த்து வாடகை வீட்டிலேயே இருந்துவிடலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். ஆனால், நகர்புறத்தில் சொந்த நிலம் இருந்தால் அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் மிக குறைந்த மூலதன செலவில் சொந்த வீடு கனவை நனவாக்கலாம். இந்த திட்டம் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | RBI MPC: குட் நியுஸ், EMI அதிகரிக்காது... ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை!!
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் தகுதி :
- விண்ணப்பதாரர் இந்தியாவில் நிரந்தர வசிப்பவராக இருக்க வேண்டும். நகர்ப்புறங்களில் பக்கா வீடு இல்லாத EWS, LIG மற்றும் MIG குடும்பங்கள் PM Awas Yojana Urban 2.0 இன் கீழ் விண்ணப்பிக்கலாம்.
- விதவைகள், ஒற்றைப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், திருநங்கைகள், SC/ST தனிநபர்கள், சிறுபான்மையினர் மற்றும் தெருவோர வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பிற சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- தகுதியுள்ள அனைத்து பயனாளிகளும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆதார் இல்லாதவர்கள் பதிவு செய்த பிறகே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.
- மாவட்ட அளவில் ஒரு குழு மற்றும் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்படும் இரண்டு மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழு இந்த திட்டத்துக்கான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
திட்டத்திற்கு விண்ணப்பிக்க, கீழே குறிப்பிடப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்:
* அதிகாரப்பூர்வ PMAY இணையதளத்துக்கு செல்லவும்
* புரொபைல் பக்கத்தில் “Apply Now” விருப்பத்தை கிளிக் செய்யவும்
* உங்கள் டெஸ்க்டாப் திரையில் தோன்றும் புதிய பக்கம், விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண் உள்ளிட்டு, ஒப்புதல் பெட்டியில் டிக் செய்து "செக்" பட்டனைக் கிளிக் செய்யவும்.
* இப்போது விண்ணப்பப் படிவம் உங்கள் டெஸ்க்டாப் திரையில் தோன்றும், விண்ணப்பதாரர் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
* அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, விண்ணப்பதாரர் படிவத்தை எல்லாம் சரியாக இருக்கிறதா என மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்.
* விண்ணப்ப செயல்முறையை முடிக்க "Submit" பட்டனை கிளிக் செய்யவும்.
எவ்வளவு தொகை கிடைக்கும்?
ஆவாஷ் யோஜனாவில் பயனாளிகளுக்கு மத்திய அரசின் பங்காக 1.5 லட்சம் ரூபாயும், மாநில அரசின் பங்காக ஒரு லட்சம் ரூபாயும் கொடுக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ