புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் இன்று தெரிவித்துள்ளதன் படி விரைவில் புதுச்சேரி அரசு "தகவல் தொழில்நுட்ப பூங்கா" (IT Park) ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப பூங்கா வருகையால் பல பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கான திட்டங்கள் முடிந்துவிட்டதாகவும் விரைவில் கட்டமைப்பு வேலைகள் துவங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட அவர் விழாவில் பேசுகையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களி முன்னேற்றத்திற்கு தேவையான வசதிகளுடன் இந்த தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தேசிய அளவில் கல்விக்கான கட்டமைபில் 5வது இடத்தில் இருக்கும் புதுச்சேரியினை முதன்மை நிலைக்கு கொண்டு வருவதே அரசின் நோக்கம் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.
புதுவை அரசானது விரைவில் காமராஜர் பல்கலை., க்கு நிரந்தர விளையாட்டு மைதானம் அமைக்கும் வகையில் தேவையான நிலம் வாங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான செயல்பாடுகள் நடைப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவ்விழாவில் அவர் கிட்டத்தட்ட 400 பட்டதாரிகளுக்கு பட்டமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!