முகத்தை பளபளப்பாக்க என்ன செய்ய வேண்டும்? ராஷ்மிகா மந்தனா கூறும் அழகு டிப்ஸ்!

Rashmika Mandanna Beauty Secrets: முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? ராஷ்மிகா மந்தனா கூறும் அழகு டிப்ஸ் இதுதான். 

Written by - Yuvashree | Last Updated : Oct 22, 2023, 08:16 PM IST
  • தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா.
  • பளபள முகத்திற்கு இவர் கூறும் சீக்ரெட்ஸ்.
  • ராஷ்மிகாவின் அழகு டிப்ஸ் இதோ!
முகத்தை பளபளப்பாக்க என்ன செய்ய வேண்டும்? ராஷ்மிகா மந்தனா கூறும் அழகு டிப்ஸ்!  title=

தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக விளங்கும் ராஷ்மிகா மந்தனாவின் பியூட்டி டிப்ஸ்களை தெரிந்து கொள்வோம். அதற்கு முன்னர் அவர் யார் என பார்க்கலாமா? 

ராஷ்மிகா மந்தனா:

தமிழ் ரசிகர்களுக்கு ‘சுல்தான்’ படம் மூலம் அறிமுகமானவர், ராஷ்மிகா மந்தனா. ஆனால் இதற்கு முன்னரே அவர் இந்தியா முழுவதும் பிரபலமாகியிருந்தார். அதற்கு காரணமாக அமைந்த படம், ‘அர்ஜூன் ரெட்டி’. சுல்தான் படத்தையடுத்து ராஷ்மிகாவிற்கு விஜய்யுடன் சேர்ந்து ‘வாரிசு’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பாலிவுட்டிலும் இவர் ‘அனிமல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. அழகான நடிகையாக மட்டுமன்றி ரசிகர்களை நன்கு மதிக்கும் நடிகையாகவும் வலம் வருகிறார், ராஷ்மிகா. இவருக்கு “நேஷனல் க்ரஷ்” என்ற இன்னொரு பெயரும் உண்டு. 

ராஷ்மிகாவின் அழகு ரகசியம் என்ன? 

ஸ்கின் கேர், மேக் அப்பை தவிர ராஷ்மிகாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல அழகு ரகசியம் உள்ளது. அவை என்னென்ன தெரியுமா? 

1.இயற்கை அழகை ஏற்றுக்கொள்ளுதல்..

இயற்கை அழகை விரும்பும் நடிகைகளுள் ஒருவர், ராஷ்மிகா. இவர், வெளியில் செல்லும் போதும் நேச்சுரல் மேக்-அப் லுக்கில்தான் செல்வாராம். இவர், முகத்திற்கென்று பிரத்யேகமாக எந்த சிகிச்சைகளையும் மேற்கொள்வதில்லை. நமக்கு இயற்கையாக கொடுக்கப்பட்டிருக்கும் சரும அழகை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுபவர், ராஷ்மிகா. அதனால், நம்மிடம் இருக்கும் இயற்கை அழகை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். 

2.ஹெல்தியான வாழ்க்கை முறை:

ராஷ்மிகாவிற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்றால் மிகவும் பிடிக்குமாம். தினசரி உடற்பயிற்சி, சரியான டயட் உணவுகள், நீர்சத்தினை உடலில் தக்கவைத்துக்கொள்வது என தன் உடலுக்கு தேவையான நல்ல விஷயங்களை இவர் செய்வது வழக்கம். இது, இவரது முகம் பளபளவென பொலிவாக இருக்க காரணமாக இருக்கிறது. 

மேலும் படிக்க | காலையில் சுடு தண்ணீர் குடிப்பதால் எடை குறையுமா?

3.தன்னம்பிக்கை முக்கியம்:

ராஷ்மிகா, தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது, அழகை அதிகமாக உதவி புரியும் என கூறுகிறார். நமது சருமம் குறித்து நாம் முதலில் உயர்வாக நினைக்க வேண்டும் என்பது ராஷ்மிகாவின் கருத்தாக உள்ளது. இதனால் நமக்குள் நம்மை பற்றி பாசிடிவான எண்ணங்கள் வளர்ந்து, பிறரையும் ஈர்க்குமாம். 

4.குறைவான மேக்-அப்:

ராஷ்மிகா மந்தனா, எங்கு சென்றாலும் குறைவான மேக்-அப் போட்டுக்கொண்டு செல்வாராம். தன்னுடைய இயற்கையான அழகை வெளிக்காட்டுவதில் அதிக ஆர்வம் காட்டும் நடிகை இவர். மேக்-அப் நம் அழகை கூட்ட வேண்டுமே அன்றி, நம் இயற்கை அழகை சிதைப்பதாக இருக்க கூடாது என்று ராஷ்மிகா கூறுகிறார். முகத்தில் உள்ள குறைகளை மறைக்க மேக்-அப் உபயோகிக்க கூடாது எனவும், அழகாக இருக்கும் முக அம்சங்களை இன்னும் அழகாக காட்ட மேக்-அப் உபயோகிக்க வேண்டும் என்றும் இவர் கூறுகிறார். 

ஸ்கின் கேர் முக்கியம்:

சருமத்தை பார்த்துக்கொள்ள, ஸ்கின் கேர் அவசியம் என்கிறார் ராஷ்மிகா. முகத்தை க்ளென்ஸ் செய்வது, மாய்ஸ்ட்ரைசர் பூசுவது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்கின் கேர் க்ரீமை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். 

ஹேர்ஸ்டைல்ஸ்:

ராஷ்மிகாவின் ஹேர்ஸ்டைல்ஸ்களும் மிகவும் பிரபலம். நாம் உடுத்தும் உடைக்கு ஏற்றவாறு ஹேர் ஸ்டைல் செய்வது நம்மை எக்ஸ்ட்ரா அழகாக காண்பிக்கும். இதனால் நமது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | 3 வாரங்களில் 10 கிலோ எடை குறைப்பது எப்படி? இதோ சில சிம்பிள் டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News