‘சாதாரண Sale’-ஐ ‘செம Sale’ ஆக்கும் SBI-ன் இந்த 5 அம்சங்கள்: மறந்துடாதீங்க மக்களே….

SBI பண்டிகைகளுக்கான மகிழ்ச்சிப் பரிசாக தனிநபர் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தில் 100% தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2020, 08:28 PM IST
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு விழாக்களில் கவர்ச்சிகரமான சலுகைகளை கொண்டு வந்துள்ளது.
  • SBI வாடிக்கையாளர் தங்கக் கடன், கார் கடன் அல்லது தனிநபர் கடனுக்காக SBI YONO மூலம் விண்ணப்பித்தால், அவர் செயலாக்கக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
  • SBI வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் அல்லது அமேசானிலிருந்து பொருட்களை வாங்க EMI வசதியை வழங்கியுள்ளது.
‘சாதாரண Sale’-ஐ ‘செம Sale’ ஆக்கும் SBI-ன் இந்த 5 அம்சங்கள்: மறந்துடாதீங்க மக்களே…. title=

பண்டிகை காலத்தில் ஷாப்பிங் செய்வதற்காகவோ அல்லது எந்தவொரு முக்கியமான வேலைக்காகவோ தனிப்பட்ட கடன் வாங்குவது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருதால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உங்களுக்காக மிகவும் கவர்ச்சிகரமான சலுகையை கொண்டு வந்துள்ளது.

 

SBI பண்டிகைகளுக்கான மகிழ்ச்சிப் பரிசாக தனிநபர் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தில் 100% தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. வங்கி உங்களுக்கு எவ்வளவு தனிப்பட்ட கடனை வழங்க முடியும் என்பது பற்றி உங்கள் வீட்டிலிருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். SBI Yono மூலம் கடனுக்கு விண்ணப்பித்தால், சில நிமிடங்களில் பணம் உங்கள் கணக்கில் வரும்.

 

இந்த முறை விழாக்கால ஷாப்பிங் செய்யும்போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்:

 

1.SBI-ன் எளிமையான கடன் வசதிகள்

SBI உங்களுக்காக முன் அங்கீகரிக்கப்பட்ட கடனை (Pre approved loans) வழங்குகிறது. இந்த கடனை வீட்டிலிருந்து 4 கிளிக்குகளில் பெறலாம். நீங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை பார்க்க, PAPL என எழுதி, உங்கள் SBI கணக்கின் கடைசி 4 எண்களையும் சேர்த்து எழுதி 567676 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். செய்தி அனுப்பியவுடனேயே நீங்கள் எவ்வளவு தனிப்பட்ட கடனை வாங்க முடியும் என்பதை வங்கி உங்களுக்குத் தெரிவிக்கும்.

 

2. உங்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்?

SBI-ல் 9.6 சதவீத வட்டி விகிதத்துடன் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. உங்கள் சிபில் மதிப்பெண்ணைப் பொறுத்து, நீங்கள் எவ்வளவு கடன் பெறலாம் என்பது முடிவு செய்யப்படும்.

 

3. SBI வழங்கும் சலுகைகள்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு விழாக்களில் கவர்ச்சிகரமான சலுகைகளை கொண்டு வந்துள்ளது. வங்கி தங்கக் கடன்கள், கார் கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களை மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வழங்கி வருகிறது. அத்துடன் செயலாக்கக் கட்டணத்தை 100% தள்ளுபடி செய்வதாகவும் வங்கி அறிவித்துள்ளது.

 

4. SBI YONO மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கவும்

 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கையாளர் தங்கக் கடன், கார் கடன் அல்லது தனிநபர் கடனுக்காக SBI YONO மூலம் விண்ணப்பித்தால், அவர் செயலாக்கக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. அதே நேரத்தில், வங்கியிடமிருந்து கடனுக்கான ஒப்புதலும் விரைவில் கிடைத்துவிடும்.

 

5. SBI-ன் இந்த சலுகையின் கீழ் ஷாப்பிங் செய்யுங்கள்

 

பண்டிகைகளை மனதில் கொண்டு Amazon மற்றும் Flipkart விற்பனையை அறிவித்துள்ளன. நீங்கள் ஒரு SBI வாடிக்கையாளராக இருந்தால், இந்த சேலில் நீங்கள் மின்னணு, வீட்டு உபகரணங்கள் அல்லது உங்களுக்கு விருப்பமான எந்தவொரு பொருட்களையும் EMI-ல் கவர்ச்சிகரமான தள்ளுபடியுடன் வாங்க முடியும். SBI வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் அல்லது அமேசானிலிருந்து ஆன்லைனில் ட்யூரபிள் நுகர்வோர் பொருட்களை வாங்க EMI வசதியை வழங்கியுள்ளது.

SBI வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டுகளிலிருந்து EMI வசதியைப் பெறலாம். வங்கியின் இந்த வசதியின் கீழ், வாடிக்கையாளர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்க முழு பணத்தையும் ஒன்றாக செலுத்த வேண்டியதில்லை. மாத தவணையை செலுத்தும் வகையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

Trending News