Gold Loan-ல் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது SBI: முழு விவரம் உள்ளே

SBI, தங்களது தங்க நகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் முழுச் சந்தையிலும் மிகக் குறைவானது என்று தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2020, 11:01 AM IST
  • SBI-யின் தங்கக் கடன் திட்டத்தின் பங்கு சந்தையில் வேகமாக அதிகரித்து வருகிறது.
  • கடந்த ஜூலை முதல் SBI வீட்டுக் கடன் வணிகத்தில் வங்கி கவனம் செலுத்தி வருகிறது.
  • புகார்கள் மற்றும் பரிந்துரைகளுக்காக SBI நான்கு வெவ்வேறு தொலைபேசி எண்களைத் தொடங்கும்.
Gold Loan-ல் சிறப்பு சலுகைகளை வழங்குகிறது SBI: முழு விவரம் உள்ளே  title=

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைக் கடனுக்கான சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இதன் கீழ், இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான தங்க கடனை ஊக்குவிக்க வங்கி சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது.

நடப்பு நிதியாண்டில் உத்தரபிரதேசத்தில் ரூ .550 கோடி தங்க கடனை வழங்க SBI இலக்கு நிர்ணயித்துள்ளது. இதே போல் மற்ற மாநிலங்களுக்கும் படிப்படியாக தங்கக் கடனுக்கான இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்த ஆண்டு வங்கியால் 300 கோடி ரூபாய்க்கு மேல் தங்கக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

SBI-ன் தங்கக் கடனில் மிகக் குறைந்த வட்டி விகிதம்

தங்க நகைக் கடன்கள் (Gold Loan) குறித்து கூறுகையில், SBI, தங்களது தங்க நகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் முழுச் சந்தையிலும் மிகக் குறைவானது என்று தெரிவித்துள்ளது. SBI தங்க நகைக் கடனுக்கு விதிக்கும் வட்டியின் அளவு 7.5 சதவீதமாகும்.

இதன் காரணமாக, SBI-யின் தங்கக் கடன் திட்டத்தின் பங்கும் சந்தையில் வேகமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள தங்கக் கடன்களுக்கான சந்தையின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் என்று SBI கூறியுள்ளது. மொத்த அளவுகளில் கார் கடன் (Car Loan) மற்றும் வீட்டுக் கடன்களில் SBI-யின் பங்கு 33 சதவீதமாகும். எனினும், தங்கக் கடனில் இந்த பங்களிப்பு இரண்டு சதவீதம் கூட இல்லை.

ALSO READ: தொடர்ந்து 3 மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால், உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்!

கடந்த ஜூலை முதல் வீட்டுக் கடன் (Home Loan) வணிகத்தில் வங்கி கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான நல்ல முன்னேற்றங்களையும் வங்கி கண்கூடாகக் கண்டு வருகிறது.

SBI ‘கிராமத்தை நோக்கி’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

SBI கிராமங்கள் மற்றும் நகர மக்களுக்காக ‘கிராமத்தை நோக்கி’ திட்டத்தையும் தொடங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்து பெரிய அதிகாரிகளும் வெவ்வேறு கிராமங்களுடன் இணைக்கப்படுவார்கள். அவர்கள் கிராமங்களுக்குச் சென்று, விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோரின் நிதித் தேவையைப் புரிந்துகொண்டு, அவற்றை நிறைவேற்ற வங்கியால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள்.

இது தவிர, மக்களின் உண்மையான தேவைகளையும் குறைபாடுகளையும் புரிந்துகொள்ள, புகார்கள் மற்றும் பரிந்துரைகளுக்காக நான்கு வெவ்வேறு தொலைபேசி எண்களைத் தொடங்கவும் SBI தயாராகி வருகிறது.

ALSO READ: SBI-ன் YONO செயலியை Login செய்யாமலே இனி பணப்பரிவர்தனை செயலாம்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News