SeePics: மகேந்திரா நிறுவனத்தின் Roxor பற்றி தெரியுமா?

இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா தனது அட்டகாசமான Roxor-னை தற்போது அமெரிக்காவில் களமிறக்கியுள்ளது!

Last Updated : Mar 4, 2018, 01:42 PM IST
SeePics: மகேந்திரா நிறுவனத்தின் Roxor பற்றி தெரியுமா? title=

இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா தனது அட்டகாசமான Roxor-னை தற்போது அமெரிக்காவில் களமிறக்கியுள்ளது!

சாலை பிரயான பிரியர்களின் கவணத்தை ஈர்த்துள்ள இந்த வாகனம், பார்பதற்கு மட்டுமல்ல செயல்திறனும் அட்டகாசமாக தான் உள்ளது. Jeep போன்ற வடிவத்தினை இது ஒத்தி இருந்தாலும் அதைவிட குறைந்ந அளவில் கச்சிதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

எஃகு சட்டகம், திட அச்சுகள், இலை நீரூற்றுகள் ஐந்து வேக கைமுறை பரிமாற்றம், இரண்டு வேக பரிமாற்ற வழக்கு மற்றும் 45 mph ஒரு உயர் வேகம் போன்ற பல சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது இந்த Roxor.

இது 62 hp மற்றும் 144 lb-ft torque கொண்ட 4-சிலிண்டர் டர்போரைல் இயந்திரத்தை கொண்டிருப்பதால் சுமார் 3,490 பவுண்டுகள் வரை ஏற்று பயணிக்க வல்லது. தெருக்களின் ராஜா என அழைக்கப்படும் இந்த Roxor, சாதாரண பயணத்தினை பிரமாண்ட பயணமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த Roxor ஆனது, தற்போது அமெரிக்காவில் $15,499-க்கு கிடைக்கிறது. இந்தியாவின் சந்தைக்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Trending News