இனி காதல் கசக்காது... லவ் லைஃப்பை இனிமையாக்கும் Simmer Dating... இதோ முழு விவரம்

Dating Tips: தற்போது GenZ தலைமுறையினரால் பின்பற்றப்படும் Simmer Dating உங்கள் காதல் அனுபவத்தை இனிப்பானதாக மாற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த டேட்டிங் முறை குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 18, 2024, 09:43 PM IST
  • Simmer Dating குறித்து ஒரு டேட்டிங் செயலி ஆய்வு நடத்தி உள்ளது.
  • இதில் GenZ தலைமுறையினர் அதிகமாக பின்பற்றுவதாக தகவல்.
  • GenZ காதலர்களில் பாதி பேர் Simmer Dating முறையை பின்பற்றுகின்றனர்.
இனி காதல் கசக்காது... லவ் லைஃப்பை இனிமையாக்கும் Simmer Dating... இதோ முழு விவரம் title=

Dating Tips In Tamil: இந்த காலத்தில் ஒருவர் காதலில் விழுவதற்கு கல்லூரியோ, வேலை செய்யும் அலுவலகமோ, பஸ் ஸ்டாண்டோ, கோயிலோ, குளமோ தேவையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. மொபைலில் கிடைக்கும் சில நம்பகத்தன்மையான (?) டேட்டிங் செயலிகளை வைத்திருந்தாலோ போதுமானது என்றாகிவிட்டது.  இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் மட்டுமில்லை இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் கூட இதுதான் நிலைமை. உலகெங்கும் டேட்டிங் செயலி மூலம் காதலன்/காதலியை தேடும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது என்றே கூற வேண்டும். 

ஆனால், இதுபோன்ற டேட்டிங் முறையை பயன்படுத்தும் சிலருக்கு அசௌகரியங்களும் உள்ளது. நிலையான காதல் உறவுக்கு யாரும் தயாராக இல்லை என்ற பேச்சு இவர்களுக்கு மத்தியில் அதிகம் இருக்கிறது. அனைத்திற்கும் அவசரம் என்ற மனநிலையில்தான் பலரும் டேட்டிங் செயலியை பயன்படுத்துகின்றனர் என்கின்றனர். ஆனால், இந்த மனநிலை சிலருக்கு வெறுப்பையும், வெறுமையையும் தருகிறது என்கின்றனர்.

Simmer Dating என்றால் என்ன?

அப்படியிருக்க, இந்த GenZ தலைமுறையினர் கண்டுபிடித்த டேட்டிங் முறைதான் Simmer டேட்டிங்... அதாவது, காதலில் எந்த அவசரமும் காட்டாமல் நிதானமாக, பொறுமையாக ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் முறையாக இந்த Simmer டேட்டிங் உள்ளது. இதையும் அவர்கள் டேட்டிங் செயலி மூலம் தேர்வு செய்யும் பார்ட்னர்களிடமே பின்பற்றுகின்றனர் என்றாலும், எவ்விதத்திலும் அவசரம் காட்டாமல் காதலில் ஆழமாக இறங்குவதற்கு இந்த முறை கைக்கொடுப்பதாக அவர்கள் நினைக்கின்றனர்.

மேலும் படிக்க | திருமணத்திற்கு முன்பு இந்த விஷயங்களை கேட்டு கொண்டால் பிரச்சனை வராது!

 

இந்த Simmer Dating முறை GenZ தலைமுறையினரிடம் தற்போது வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து QuackQuack டேட்டிங் செயலி நடத்திய ஆய்வில் பல்வேறு விஷயங்கள் வெளிவந்துள்ளன. Simmer Dating முறை எந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களால் அதிகம் பின்பற்றப்படுகிறது, அதில் எத்தனை பேர் நம்பிக்கையுடன் உள்ளனர் என்பதை அந்த ஆய்வு கண்டறிய முற்பட்டுள்ளது.

ஆய்வில் வெளியான தகவல்

இந்த ஆய்வின் முடிவில் பெரிய நகரங்களில் இருக்கும் GenZ தலைமுறை காதலர்களில் ஏறத்தாழ பாதி பேர் இந்த Simmer Dating முறையை பின்பற்ற முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த Simmer Dating முறையின் தத்துவமே ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்கேற்ற காலத்தை கொடுத்து, பொறுமையாக செயலாற்றுவதுதான். தங்கள் பார்ட்னருக்கு என்ன பிடிக்கும், எது பிடிக்காது, அது ஏன் பிடிக்காது, அது பிடிக்காததற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் உள்ளிட்டவை தெரிந்துகொள்வதன் மூலம் உறவில் இயல்பாகவே நெருக்கத்தை அதிகரிக்கும் முறையாக இது பார்க்கப்படுகிறது. 

காதல் கசக்குதா...

வெறும் உடல் ரீதியான நெருக்கத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மன ரீதியான நெருக்கத்தை வளர்ப்பதற்கு தாயாரக இருப்பார்கள். இதன்மூலம், உணர்ச்சி ரீதியான பிணைப்பும், நம்பகத்தன்மையும் இருவருக்குள்ளும் ஏற்படும். காதல் உறவும் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சி பெறும். இதன்மூலம் உறவில் மதிப்பும் நம்பகத்தன்மையும் அதிகரித்தாலும் புரிதல் மேலோங்கும். அதாவது, ஒருவேளை நீங்கள் அந்த உறவில் இருந்து வெளியேற வேண்டும் என்றாலும், அதுகுறித்த புரிதல் அந்த பார்ட்னருக்கும் இருக்கும், அதற்கு இந்த Simmer Dating என்பது நிச்சயம் பெரிய உதவியாக இருக்கும் என்கின்றனர் GenZ தலைமுறையினர். 

நீங்களும் இந்த வழக்கமான காதல்களால் அதிகம் மனமுடைந்து, காதல் கசக்குத்தையானு பாட்டு பாடிக்கொண்டிருந்தீர்கள் என்றால் உடனே இந்த Simmer Dating முறையை ஒருமுறை முயற்சித்து பாருங்கள். காதலின் கசப்பு போய், அந்த காதலை நினைத்தாலே இனிக்கலாம்... 

மேலும் படிக்க | தம்பதிகள் இடையே நெருக்கமே இல்லையா... கணவன், மனைவி படிக்க வேண்டிய 5 டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News