ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு உச்சகட்ட கவனம் தேவை

சூரியன்-கேதுவுடன் இணைந்து வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரியன்-கேது இணைவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 1, 2021, 06:51 PM IST
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு உச்சகட்ட கவனம் தேவை

Solar Eclipse 2021: டிசம்பர் 4ம் தேதி, சனிக்கிழமை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது 2021 ஆம் ஆண்டின் கடைசி கிரகணமாகும். இந்திய நேரப்படி, இந்த சூரிய கிரகணம் 2021 காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3:07 மணிக்கு முடிவடையும்.

ஜோதிட சாஸ்திரப்படி, இந்த சூரிய கிரகணம் (Solar Eclipse) கேட்டை மற்றும் விருச்சிக நட்சத்திர மண்டலத்தில் நிகழும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சூரிய கிரகணத்தில் (Solar Eclipse 2021), சூரியன் கேதுவுடன் இணையும்.

இது தவிர சந்திரனும் புதனும் கூடி வருகிறார்கள். பொதுவாக, சூரியன்-கேதுவுடன் (Surya-Ketu) இணைந்து வருவதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரியன்-கேது இணைவதால் ஏற்படும் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த சூரிய கிரகனத்தின் போது எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

சூரிய கிரகணத்தின் தாக்கம் எந்த ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காணலாம்:

மேஷம்- மேஷ ராசிக்காரர்கள் விபத்துகள் குறித்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. மேலும், உடல் ஆரோக்கியத்திலும் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

மிதுனம்- இந்த ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் நிவாரணம் தரும். வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

கடகம் - கடக ராசிக்காரர்களின் (Zodiac Sign) மன நிலை மற்றும் ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.

சிம்மம்- இந்த ராசிக்காரர்களின் கவலைகள் நீங்கும். மேலும், நீண்ட நாட்களாக நீங்கள் சிக்கியிருந்த ஒரு பெரிய சர்ச்சையிலிருந்தும் விடுபடுவீர்கள்.

கன்னி- கன்னி ராசிக்காரர்களின் தடைபட்ட பணிகள் நிறைவேறும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

துலாம்- துலா ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.

ALSO READ:ராகு பெயர்ச்சி: இந்த 4 ராசிகாரர்களுக்கு பண வரவு ஏற்படும் 

விருச்சிகம் - எந்த ஒரு வேலையிலும் கவனமாக முடிவெடுக்க வேண்டும். அவசரமாக முடிவுகளை எடுப்பது தீங்கு விளைவிக்கும்.

தனுசு - நீங்கள் சில பெரிய அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி விபத்துகளில் இருந்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகரம்- இந்த ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணத்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். மகர ராசிக்காரர்களுக்கு இந்த கிரகணம் பல லாபங்களை அள்ளித்தருவதற்கான வாய்ப்புகள் வலுவாக உள்ளன.

கும்பம்- கும்ப ராசிக்காரர்கள் பெரிய வேலைகளில் வெற்றி பெறுவார்கள். இதனுடன், அன்புக்குரியவர்களால் பொருளாதார ரீதியாகவும் பயனடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

மீனம் - மீன (Pisces) ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கை அல்லது அது தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இதனுடன், எந்த முடிவை எடுக்கும்போதும் பல முறை யோசித்து இறுதி முடிவை எடுப்பது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ:வாழ்க்கையை புரட்டி போடும் ‘5’ தோஷங்களும், அதன் பரிகாரங்களும்..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News