இதய நோய்களை தடுக்கும் சைக்கில் பயிற்சி; ஒரு பார்வை!

Fit India இயக்கம் தொடங்கியது காரணமாக, ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலம் மற்றும் உடற்தகுதி குறித்து விழிப்புடன் இருக்கிறார்கள். அதேப்போல் நீங்களும் உடற்தகுதி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

Last Updated : Sep 7, 2019, 12:31 PM IST
இதய நோய்களை தடுக்கும் சைக்கில் பயிற்சி; ஒரு பார்வை! title=

Fit India இயக்கம் தொடங்கியது காரணமாக, ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலம் மற்றும் உடற்தகுதி குறித்து விழிப்புடன் இருக்கிறார்கள். அதேப்போல் நீங்களும் உடற்தகுதி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

விழிப்புடன் இருந்தால் மட்டும் போதுமா?., செயல்பட வேண்டாமா?... சரி எப்படி செயல்படுத்துவது?.. இத்துனை கேள்விகள் வேண்டாம், ஒரு சைக்கில் இருந்தால் போதுமானது. ஆம்., நமது உடலை கட்டுக்கோப்பாய் பராமரிக்க சைக்கிலை விட நமக்கு சிறந்தது வேறு ஒன்றுமில்லை. ஆம் அத்துனை நன்மைகளை தருகிறது சைக்கில்கள்.

ஆனால்., மோட்டார் சைக்கில், கார்களின் வருகையால் தற்போது சைக்கில்கள் இருக்கும் இடம் தெரியாமல் சென்றுவிட்டது. உடல் ஆரோக்கியத்தை பேனும் சைக்கிள் ஓட்டுதலின் நன்மைகள் குறித்த சில தகல்களை நாம் கீழே பட்டியலிட்டுள்ளோம். இதோ உங்கள் பார்வைக்கு...

  • இரத்த அழுத்தம் சீரானதாக மாறும்.

சைக்கிள் ஓட்டுதல் உடலில் இரத்த அழுத்தத்தை சீரானதாக்க உதவுகிறது. பல நோய்களுக்கான காரணம் இரத்த அழுத்தத்தின் ஏற்றத்தாழ்வு என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சமநிலை சைக்கிள் ஓட்டுதலால் ஏற்படுகிறது, மேலும் பல வகையான சிக்கல்களையும் சைக்கில் ஓட்டுதல் நீக்குகிறது.

  • எடை குறைகிறது

எடை இழப்புக்கு சைக்கிள் ஓட்டுதல் சிறந்த உடற்பயிற்சி ஆகும். முப்பது வயதிற்குப் பின்னர் பெரும்பாலான ஆண்கள் வயிற்றில் கொழுப்பு வரத் தொடங்குகிறது. பெண்களில், அடிவயிற்று, தொடையில், இடுப்பின் பின்புறத்தில் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. 

சைக்கிள் ஓட்டுதல் உடலின் இந்த பாகங்கள் அனைத்திற்கும் அழுத்தம் கொடுத்து, தேவையற்ற கொழுப்பை எரிக்க உதவுகிறது. தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதன் மூலம், உடல் பருமனிலிருந்து விலகி இருக்க முடியும்.

  • எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்

எலும்பு ஆரோக்கியத்திற்கு சைக்கிள் ஓட்டுவதும் மிகவும் நன்மை பயக்கும். செயலற்ற வாழ்க்கை முறை எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது, இது எலும்புகளுக்கு கூடுதல் எடையை அளிக்கிறது மற்றும் அவை பலவீனமடைந்து நம்மையும் பலவீனம் அடைய செய்கிறது. 

சைக்கிள் ஓட்டும்போது எலும்புகள் வலிமையானவை. உண்மையில், சைக்கிள் ஓட்டுதல் மூலம், உங்கள் உடல் முழுவதும் நல்ல உடற்பயிற்சியைப் பெறுகிறது. இது எலும்புகளை பலப்படுத்துகிறது, மற்றும் உங்கள் உடல் திறனை அதிகரிக்கிறது.

  • முதிர்வை தடுத்தல்

சைக்கிள் ஓட்டுவது நம் இளமை காலத்தை நீட்டிக்க உதவுகிறது. சைக்கில் ஓட்டுவதால், இரத்த ஓட்டம் சரியாகிறது, எலும்புகள் வலுபெறுகிறது. வயிற்றில் உருவாகும் கொழுப்பை கரைக்கிறது. இதன் காரணமாக உங்கள் வயதை விட பத்து வயது இளமையாக இருக்கத் தொடங்குகிறீர்கள். அதே நேரத்தில், இது சருமத்தையும் மேம்படுத்துகிறது.

  • இதய நோய்களை தடுக்கிறது

சைக்கிள் ஓட்டுதல் என்பது ஏரோபிக் உடற்பயிற்சி ஆகும், இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இந்த செயல்பாடு மூளையில் செரோடோனின், டோபமைன் மற்றும் ஃபைனிலெதிலாமைன் போன்ற வேதிப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சோகத்தை மறந்து எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியாக இருக்க செய்கிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

Trending News