மரணத்திலிருந்து தன்னை காக்க 30 ஆண்டாக மணப்பெண்ணாய் சுற்றும் ஆண்!

மரணத்தில் இருந்து தப்பவேண்டும் என ஆண் ஒருவர் கடந்த 30 வருடங்களாக மணப்பெண் கோலத்தில் வலம்வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : Nov 3, 2019, 05:35 PM IST
மரணத்திலிருந்து தன்னை காக்க 30 ஆண்டாக மணப்பெண்ணாய் சுற்றும் ஆண்! title=

மரணத்தில் இருந்து தப்பவேண்டும் என ஆண் ஒருவர் கடந்த 30 வருடங்களாக மணப்பெண் கோலத்தில் வலம்வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

மனிதானாய் பிறந்த அனைவருக்கும் இறப்பு என்பது நாம் வேண்டாம் என்றாலும் இயற்கையாக நிகழக்கூடிய ஒரு நிகழ்வு. பொதுவாக நாம் அனைவருக்கும் மரணபயம் இருக்கும் அதை போக்க சிலர் மன சமாதனத்திற்காக சில பரிகாரங்களை செய்து வருவார்கள். இது போன்று, ஒருவர் தான் மரணத்தில் இருந்து தப்பவேண்டும் என கடந்த 30 வருடங்களாக மணப்பெண் கோலத்தில் வளம் வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம்  ஜான்பூரைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளியான சிந்தாஹரன் சவுகான்  என்பவர் தனது குடும்பத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்களை தடுப்பதற்காக கிட்ட தட்ட 30 ஆண்டுகளாக மணப்பெண் உடை அணிந்து உலா வருக்கிறார்.
சிந்தாஹரன் சவுகான் என்பவர்  தனது மூத்த மனைவி மற்றும் இரண்டாவது மனைவி இருவரின் இறப்பிற்கு  பிறகு  தன்னுடைய குடும்பத்தில் தொடர் உயிரிழப்புகள் நிகழ்ந்ததோடு அவருக்கும் உடல் நிலை மோசமாகியுள்ளது. 

இந்நிலையில் சவுகானின் இரண்டாவது மனைவி அவரது கனவில் தோன்றி தன்னுடைய திருமண உடையை அணிந்து கொண்டால் வீட்டில் எந்த பிரச்னையும் இருக்காது என தெரிவித்தால், 1989 ஆம் ஆண்டிலிருந்து  மணப்பெண் உடையையும், பெரிய மூக்கு வளையம் மற்றும் வளையல்களை சவுகான் அணிந்து வருகிறார். அன்றிலிருந்து தன்னுடைய வாழ்க்கை சுமுகமாக செல்வதாக சவுகான் தெரிவிக்கிறார். 

இது குறித்து அவர் கூறுகையில்; ஒரு நாள் என் கனவில், மேற்கு வங்கத்தில் தற்கொலை செய்து கொண்ட எனது மனைவி வந்தாள். தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாகக் கண்ணீர் விட்டு கதறினாள். அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். என்னையும் என் குடும்பத்தையும் விட்டுவிடு. உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்றேன். அப்போது, அவர்... என்னை உன்னுடன் வைத்துகொள்ள, நீ மணமகள் போல உடையணிய வேண்டும் என்றார். எப்போதும் அதை அணிந்தே வெளியே செல்ல வேண்டும் என்று கேட்டாள். நானும் அதற்க்கு ஒப்புக்கொண்டேன். அதற்குப் பின் மணமகள் போல உடையும் தோடு, மூக்குத்தி அணிந்தே வெளியே செல்கிறேன். அதில் இருந்து என் குடும்பத்தில் உயிரிழப்பில்லை. என் உடல் நிலையும் நன்றாகத் தேறிவிட்டது என்கிறார் சவுகான். 

 

Trending News