சுவிட்சர்லாந் நாய்களுக்கு காலணி உபயோகிக்க சுவிஸ் போலீஸ் அறிவுரை!

சுவிட்சர்லாந்தில் அதிக வெப்பம் காரணமாக செல்ல பிராணிகளுக்கு காலணிகளை உபயோகிக்க சுவிஸ் காவல்துறையினர் அறிவுருத்தியுள்ளனர்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 8, 2018, 04:18 PM IST
சுவிட்சர்லாந் நாய்களுக்கு காலணி உபயோகிக்க சுவிஸ் போலீஸ் அறிவுரை!  title=

சுவிட்சர்லாந்தில் அதிக வெப்பம் காரணமாக செல்ல பிராணிகளுக்கு காலணிகளை உபயோகிக்க சுவிஸ் காவல்துறையினர் அறிவுருத்தியுள்ளனர்! 

ஐரோப்பிய நாடுகள் பல இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், 1864 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக அளவிலான கோடைக் கால வெப்பம் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது! 

'ஹாட் டாக் கேம்பைன்' எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை சுவிட்சர்லாந்திலுள்ள சூரிக் நகர் காவல் துறை தொடங்கியுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. குளிர் பிரதேசமான அந்நாட்டில், சென்ற ஜூலை மாதம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவு செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் வறட்சி உண்டாகியுள்ளதாக, ஸ்விஸ் இன்ஃபோ இணையதளம் தெரிவிக்கிறது. 

30 டிகிரி செல்சியஸ் வெப்பம் என்பது நிலத்தில் காலூன்றி நடக்கும் நாய்களுக்கு 50 - 55 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பமாகத் தோன்றும் என்பதினால் காலணிகளை அணிவிக்குமாறு காவல் துறை கேட்டுகொண்டது. மேலும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சுவிட்சர்லாந்து சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Trending News