தமிழ் புத்தாண்டு: தமிழக மக்களுக்கு தலைவர்கள் டிவிட்டரில் வாழ்த்து...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்!!

Last Updated : Apr 14, 2019, 11:47 AM IST
தமிழ் புத்தாண்டு: தமிழக மக்களுக்கு தலைவர்கள் டிவிட்டரில் வாழ்த்து... title=

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்!!

புது வருடப்பிறப்பு என்றாலே எல்லோர் மனதிற்குள் உற்சாகமும், சந்தோஷமும் பொங்கி எழும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஏப்ரல் 14-ம் தேதி தமிழில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமா கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழர்களின் நாட்காட்டியில் முதல் மாதம் சித்திரை மாதம் இந்நாளை நாளை ’புது வருஷம்’ என்று கூறுவார். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ’சித்திரை விஷு’ என்றும் இந்த நாளை அழைக்கின்றனர். உலகத் தமிழர்களால் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று தமிழகம் முழுவது அரசு விடுமுறை அளித்து வருகிறது. இந்த புத்தாண்டு தினம் இலங்கையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேசமயம் கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். இவர்களோடு மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, பிஹார், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மக்களும் புத்தாண்டை பல்வேறு பெயர்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக மக்களுக்கு தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர், தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் உங்களின் ஆசைகள் நிறைவேறட்டும். அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்" என பிரதமர் வாழ்த்தியுள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்; தமிழ்நாட்டில் உள்ள சகோதர சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி: மலையாள மக்களின் புத்தாண்டு தினமான விஷூ திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

"இந்த புத்தாண்டு குறைவற்ற செல்வத்தையும், அளவற்ற மகிழ்ச்சியையும் வழங்க வேண்டும் என பிராத்திப்பதாகவும், எல்லா நலன்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்" என்றும் தமது வாழ்த்து செய்தியில் முதலமைச்சர் கூறியுள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "இனிய தமிழ்ப் புத்தாண்டு புரட்சிப் புத்தாண்டாக மலரவும், தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்தும் உங்கள் நான்" என்று பதிவிட்டுள்ளார். 

 

Trending News