)
Heart health awareness WHO : உலகளவில் அதிகமானோரின் உயிரிழப்புகளுக்கு காரணமான இரண்டு நோய்களை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய இரண்டு நோய்களால் மட்டுமே அதிகமானோர் இறப்பதாகவும் அது தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இரண்டு நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 18 மில்லியன். தென்கிழக்கு ஆசியாவில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 3.9 மில்லியன். ஆண்டுதோறும் உலக இதய தினம் செப்டம்பர் 29 ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. இந்த ஆண்டும் ‘Use Heart for Action’ என்ற தலைப்பில், அதாவது செயலுக்கு இதயத்தை பயன்படுத்து என்ற கருப்பொருளில் உலக இதய திடம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது உலக சுகாதார மையம்.
மாரடைப்புக்கு காரணம் என்ன?
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அதிகரிப்புக்கு மிக முக்கிய காரணம் புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுகள், அதிக உப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, உடற் பயிற்சியின்மை, உடல் செயலற்ற தன்மை, அதிகப்படியாக மது அருந்துவது போன்ற மோசமான வாழ்க்கை முறைகளே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் நான்கில் ஒருவருக்கு இரத்த அழுத்தம் உள்ளது. 10 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. இதற்கு அடிப்படையான காரணம் பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வது இல்லை. அத்துடன் புகைப்பிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மது பழக்கமும் இருப்பதால், இப்படியான கொடிய நோய்களுக்கு உயிரை பலி கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஆரோக்கியமாக வாழ வேண்டுமா?
பெங்களூருவைச் சேர்ந்த இருதயவியல் டாக்டர் எஸ் வெங்கடேஷ் பேசும்போது, நீண்ட மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு இதய ஆரோக்கியம் அடிப்படை என்று கூறியுள்ளார். மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற முன்கூட்டிய எச்சரிக்கை அறிகுறிகளில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும் என கூறியுள்ள அவர், இதய ஆரோக்கியம் குறித்து போதுமான விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான வாழ என்ன செய்ய வேண்டும்?
காலையில் சீக்கிரம் எழுவது, இரவில் 9 மணிக்குள்ளாக உறங்கச் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும், தவறாமல் காலை, மாலை உடற்பயிற்சி செய்துவிட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது மருத்துவரை சந்தித்து உடலை பரிசோதித்துக் கொள்ளவும். வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தியானம், யோகா ஆகியவற்றையும் பயிற்சி செய்யுங்கள்.
உங்களால் தனிப்பட்ட முறையில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் ஜிம்முக்கு சென்றுவிடுங்கள். அல்லது வீட்டின் அருகில் இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யவும். நண்பர்களோடு உடற்பயிற்சி செய்தால், வொர்க்அவுட் செய்த களைப்பே உங்களுக்கு தெரியாது. உடல் தன்னை தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் இருக்கிறது. அதனால் அதனை புரிந்து கொண்டு உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ