கிரெடிட் கார்ட் பில் கட்ட மறந்துட்டீங்களா? தாமத கட்டணத்தை தவிர்க்க சில வழிகள்!

எஸ்பிஐ கார்டு நிலுவை தொகை ரூ.500க்கு அதிகமாகவும் ரூ.1,000க்கு குறைவாகவும் இருந்தால் அபராதமாக ரூ.400 வசூலிக்கப்படுகிறது.  நிலுவை தொகை ரூ.1,000க்கு அதிகமாகவும் ரூ.10,000க்கு குறைவாகவும் இருந்தால் ரூ.750 வசூலிக்கப்படுகிறது.

Written by - RK Spark | Last Updated : Dec 10, 2022, 11:11 AM IST
  • கிரெடிட் கார்ட் பில் தேதியை மறந்து விட்டால் அதிக கட்டணம் செலுத்த நேரிடும்.
  • இதனை தவிர்க்க ஆர்பிஐ புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.
  • பில் தேதியில் இருந்து 3 நாட்கள் வரை அவகாசம் கொடுத்துள்ளது.
கிரெடிட் கார்ட் பில் கட்ட மறந்துட்டீங்களா? தாமத கட்டணத்தை தவிர்க்க சில வழிகள்! title=

பொதுவாக மனிதர்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் ஞாபக மறதி இருக்கக்கூடும், மாதந்தோறும் தாங்கள் கட்ட வேண்டிய பல தவணைகளின் தேதிகளை பெரும்பாலானோர் மறந்துவிடுவர்.  அதிலும் குறிப்பாக பல கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதிகளவில் தவணை தொகை செலுத்த வேண்டிய தேதியினை மறந்துவிடுகின்றனர்.  அவ்வாறு குறிப்பிட்ட தேதியில் தவணை செலுத்தாவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் இனிமேல் அபராதம் குறித்து கார்டுதாரர்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை.  பணம் செலுத்த தவறிய மூன்று நாட்களுக்கு பிறகு தான் கார்டுதாரர்களிடம் அபராத தொகையை வசூலிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சம் வரவு, டிஏ அரியர் சமீபத்திய அப்டேட் 

மாஸ்டர் டைரக்ஷன் - கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்குதல் மற்றும் நடத்தை வழிமுறைகளின்படி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு கிரெடிட் கார்டுதாரர் தவணை செலுத்த வேண்டிய தேதியிலிருந்து மூன்று நாட்கள் வரை தொகையை செலுத்தாமல் இருந்தால் மட்டுமே அவரிடம் இருந்து அபராத கட்டணம் தாமத கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.  எனவே குறிப்பிட்ட தேதிதியில் நீங்கள் கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்த தவறினால் கடைசி தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் நீங்கள் பணம் செலுத்தலாம்.  இதற்கு உங்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாது மற்றும் குறிப்பிட்ட தேதியில் தவணையை செலுத்தினால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கும்.

சமீபத்திய விதிகளின்படி, தவணை செலுத்த தவறிய தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிறகும் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் அபராத தொகை வசூலிக்கப்படும் மற்றும் இந்த கட்டணம் அடுத்த பில்லிங் சுழற்சியில் சேர்க்கப்படும்.  உங்கள் தவணை தொகை அதிகமாக இருந்தால் அபராத தொகையும் அதிகமாக வசூலிக்கப்படும்.  உதாரணமாக எஸ்பிஐ கார்டு நிலுவை தொகை ரூ.500க்கு அதிகமாகவும் ரூ.1,000க்கு குறைவாகவும் இருந்தால் அபராதமாக ரூ.400 வசூலிக்கப்படுகிறது.  நிலுவை தொகை ரூ.1,000க்கு அதிகமாகவும் ரூ.10,000க்கு குறைவாகவும் இருந்தால் ரூ.750 மற்றும் நிலுவைத்தொகை ரூ.10,000 மற்றும் ரூ.25,000க்கு மேல் இருந்தால் ரூ.950 மற்றும் ரூ.25,000 முதல் ரூ.50,000க்கு குறைவான நிலுவைத் தொகைக்கு ரூ.1,100 வசூலிக்கப்படுகிறது.  மேலும் ரூ.50,000க்கு மேல் உள்ள நிலுவைத் தொகைக்கு ரூ.1,300 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: DA, DR உயர்வு எப்போது? வெளியான சூப்பர் அப்டேட்! 

Trending News