முதுகுவலியை சமாளிப்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். மேலும், சரியான நேரத்தில் அதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் தினசரி அசௌகரியத்தை ஏற்படுத்தும். முதுகுவலியை சரி செய்ய, யோகாசனங்கள் செய்யக்கூறி பல மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. இதனால், முதுகுப்பகுதி வலுப்பெற்று மன அழுத்தத்தையும் குறைக்கும்.
நீங்கள் தொடர்ந்து முதுகுவலியை சந்திக்கும் நபராக இருந்தால், அது உங்களுக்கு ஒரு சவாலாக தோன்றும். ஆனால் யோகா நிவாரணத்திற்கான முழுமையான தீர்வினை வழங்குவதாக கூறப்படுகிறது. மனம் மற்றும் உடல் சிகிச்சையை இணைத்து, யோகா முதுகுவலியையும் அடிக்கடி ஏற்படும் மன அழுத்தத்தை நிவர்த்தி செய்கிறது.
பூனை-மாடு போஸ் யோகா:
இந்த யோகாசனம் உங்களது முதுகெலும்பையும் அதன் வலியையும் சீர்படுத்த உதவும். இதை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
மேலும் படிக்க | இருமல் நிற்கவே மாட்டேங்குதா? ‘இந்த’ வைத்தியம் செய்து பாருங்கள்!
>நான்கு கால்களில் அமர வேண்டும்
>உங்களது தோள்பட்டை, கை மற்றும் முட்டியை இடுப்பிற்கு நேராக கிழ் வைக்கவும்.
>மூச்சை உள்ளிழுத்து, உங்கள் வயிற்றை தரையை நோக்கி இறக்கி, உங்கள் கன்னம் மற்றும் மார்பை மேலே உயர்த்தவும்.
>மூச்சை வெளியேற்றி, உங்கள் கன்னத்தை உங்கள் மார்புக்கு கீழே வைக்கவும்.
>இப்போது, உங்கள் வயிற்றை நோக்கி இழுத்து, உங்கள் முதுகை வளைக்க முயற்சிக்கவும்.
>இந்த ஆசனத்தை ஒரு நிமிடம் தொடர்ந்து செய்து, உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
முக்கோண போஸ்:
முதுகுவலி மற்றும் கழுத்து வலியைக் குறைக்கவும், முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் இடுப்பு வலியை குறைக்கவும் இந்த போஸ் உதவும்.
>கால்களை 4 அடி இடைவெளியில் வைத்து நேராக நிற்கவும், உங்கள் வலது கால்விரல்களை முன்னோக்கி மற்றும் இடது கால்விரல்களை 45 டிகிரி கோணத்தில் திருப்பவும்.
>கைகளை தரையில் இணையாக, உள்ளங்கைகளை கீழே நீட்டவும்.
>உங்கள் வலது பக்க இடுப்பில் கை வைத்து, உங்கள் வலது கையை உங்கள் கால், தடுப்பு அல்லது தரையை நோக்கி நீட்டவும்.
>இப்படியே ஒரு நிமிடத்திற்கு செய்யவும்
ஸ்பிங்க்ஸ் போஸ்
>உங்கள் உடற்பயிற்சி பாயில் உங்கள் முகம் பதியுமாறு கீழே படுத்துக் கொள்ளுங்கள்.
>உங்கள் கால்களை நீட்டி, முழங்கைகளை உங்கள் தோள்களுக்குக் கீழே, மற்றும் முன்கைகளை தரையில் வைக்கவும்.
>உங்கள் முதுகு மற்றும் வயிற்று தசைகளை ஈடுபடுத்தி, உங்கள் மேல் உடல் மற்றும் தலையை உயர்த்தவும்.
>முதுகுத்தண்டை நீளமாக வைத்து, நேராக பார்க்கவும்.
>இப்படியே 5 நிமிடங்களுக்கு நிற்கவும்.
புறா போஸ்:
நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் முதுகு வலியை இந்த போஸ் நீக்குகிறது.
>நீங்கள் சுகாசனம் ஆசனத்தை உட்கார்ந்த நிலையில் தொடங்கலாம்.
>வலது முழங்காலை உடற்பயிற்சி பாயின் தொடக்கப் புள்ளியை நோக்கி வைக்கவும், இடது காலை பின்னால் நீட்டவும்.
>இடுப்பை சதுர வடிவமாக வைத்து, நிமிர்ந்து நிற்க வேண்டும் அல்லது முன்னோக்கி பார்க்கவும்.
>இப்படியே 5 நிமிடங்களுக்கு நிற்கவும்.
மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்ய உகந்த நேரம் காலையா? மாலையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ