ஜெர்மனி கால்பந்து விளையாட்டு வீரர் திருமணத்தை மாப்பிள்ளை தோழனாக நின்று திருமணத்தை நடத்திய அதிபர் எர்துவான்!
கால்பந்து விளையாட்டு வீரர் மேசுட் ஒஸிலின் கடந்த ஆண்டு உலகப் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு முன்பு அதிபர் எர்துவானோடு எடுத்துகொண்ட புகைப்படம் சர்ச்சைக்குள்ளானது. இந்த புகைப்படங்களால் ஜெர்மனியில், தான் அனுபவித்த இனவெறியை சுட்டிக்காட்டி அவர் கால்பந்து போட்டிகளில் விளையாடப்போவதில்லை என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அர்செனல் கால்பந்து வீரரான மேசுட் ஒஸில், அவரது காதலியும் முன்னால் மிஸ் அமினி குல்செயை வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அதிபர் எர்துவானை தனது மாப்பிள்ளை தோழனாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க கேட்கப்போவதாக ஒஸில் கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இது துருக்கியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து துருக்கி அதிபர் எர்துவான் பிரபல நட்சத்திரங்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கு கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் கால்பந்து வீரர் மேசுட் ஓஸில் திருமணத்தை மாப்பிள்ளை தோழனாக இருந்து அதிபர் நடத்தி வைத்துள்ளார்.
Video: Mesut Özil & Amine Gülse got married with Turkey president Recep Tayyip Erdogan & his wife, Emine, as witnesses at the ceremony in Istanbul. #afc pic.twitter.com/S4ir8YnQUJ
— afcstuff (@afcstuff) June 7, 2019