கணக்கு வாத்தியாருக்கு வாக்கப்பட்டா இப்படி தான் நடக்கும்...

ஐக்கிய நாட்டு திருமண பந்தியில், கணக்கு கேள்விக்கு பதில் கூறினால் தான் உணவு வழங்கப்படுகிறதாம்... இந்த முறைமை நம்ம ஊருக்கு வந்தால் எப்படி இருக்கும்?

Updated: Jan 8, 2019, 02:36 PM IST
கணக்கு வாத்தியாருக்கு வாக்கப்பட்டா இப்படி தான் நடக்கும்...
Representational Image

ஐக்கிய நாட்டு திருமண பந்தியில், கணக்கு கேள்விக்கு பதில் கூறினால் தான் உணவு வழங்கப்படுகிறதாம்... இந்த முறைமை நம்ம ஊருக்கு வந்தால் எப்படி இருக்கும்?

ஐக்கிய நாட்டை சேர்ந்த இளம் காதல் ஜோடி சமீபத்தில் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த விரும்பிய ஜோடி., திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் உணவு பந்தியில் அமர வேண்டும் எனில் கணக்கு கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்க வேண்டும் என நிபந்தனையை முன்வைதுள்ளனர்.

இதுகுறித்து மணப்பெண் தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... 

"நானும் என் வருங்கால கணவரும் கணக்கு பேராசிரியர்கள். எங்களது நண்பர்களும் கூட., எனவே எங்கள் திருமணத்தை கணக்கின் விளையாட்டுகளுடன் நடத்த விரும்புகின்றோம். முழுவதுமாக அல்லாமல், வெறும் பந்தியோடு கணக்கு விளையாட்டை நிறுத்திக்கொள்கிறோம்.

எங்கள் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள், பந்தியில் தங்களது இருக்கையினை கண்டறிய சிறியதொரு கணக்கு விளையாட்டினை விளையாட வேண்டியிருக்கும். எங்கள் திருமணதில் பங்கேற்கும் பலர் கணக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் என்பதால் விளையாட்டு சற்று கடினமானதாக கூட இருக்கலாம்" என பதிவிட்டுள்ளார்.